இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்தப் புத்தாண்டினை எவ்வளவு புதிதாக தொடங்கினாலும் சரி, நாம் எவ்வளவு பெரிய திட்டங்களைச் செய்திருந்தாலும் சரி, நாம் தேவனோடு நடக்கவில்லை என்றால், இந்த ஆண்டு ஆவிக்குரிய வெற்றியாக இருக்காதுஎன்பது நிச்சயம் . இந்த புத்தாண்டு ஈவினை நாம் பெறும்போது, ​​தேவனுக்காக ஊழியம் செய்ய உறுதி ஏற்போம். வரவிருக்கும் ஆண்டிற்கு நாம் திட்டமிடுகையில், அந்தத் திட்டங்கள் கர்த்தருடைய வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தின் அடிப்படையிலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் அடிப்படையிலும், நாம் அவருக்காக வாழும்போது நாம் எதைச் சாதிக்க வேண்டும் என்று நம் பரலோகத்தின் தேவன் விரும்புகிறார் என்பதை ஜெபத்துடன் கருத்தில் கொள்வதையும் உறுதி செய்வோம். .

என்னுடைய ஜெபம்

காலங்களை கடந்த தேவனே , பரலோகத்திலுள்ள என் பிதாவே, இந்தப் புதிய ஆண்டைத் தொடங்கும் போது என்னுடனே மிக அருகில் இருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன் . தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து, ஒவ்வொரு நாளும் உமது விருப்பத்தை என் கண்களுக்கு வெளிப்படுத்துங்கள். உம்மை அதிகமாக நேசிக்கவும், திறம்பட உமக்கு ஊழியம் செய்யவும், அர்த்தமுள்ள வழிகளில் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், அப்படி உதவி வேண்டும் நபர்களை என் வாழ்க்கையில் கொண்டு வாரும் . வரவிருக்கும் நாட்களில் நான் என்ன செய்கிறேனோ, என்ன நினைக்கிறேனோ, என்ன சொல்கிறேன் என்பதில் உமக்கே எல்லா கனமும் பெருமையும் கொண்டுவர விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து