இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்றைய நமது வசனம், நமது பழைய வாழ்க்கை முறையைத் தள்ளிப் போடுவதற்கான பவுலானவரின் சவாலில் இருந்து வருகிறது (எபேசியர் 4:22-24). இயேசுவை அறிவதற்கு முன்பாக நம்முடைய முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, , இப்போது நாம் புதுப்பிக்கப்படுவதற்கு நம்மை தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். ஆனால் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள முடியாது. கெட்டுப்போகிற பழைய மனுஷனின் தாக்கத்திற்கு எதிராக நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும், ஆனால் பரலோகத்தின் தேவன் மாத்திரமே நம்மைப் புதுப்பித்து, அவருடைய சித்தத்தை இன்னும் முழுமையாகப் பகுத்தறிந்து கொள்ள உதவ முடியும் (ரோமர் 12:1-2). தேவன் நம்மில் புதுப்பித்தல் வேலையைச் செய்வதாக வாக்களிக்கிறார்! பாவம், மரணம், நரகத்திலிருந்து மாத்திரம் நம்மைக் காப்பாற்ற இயேசு வரவில்லை; நாம் அவருடைய சித்தத்தை செய்வதற்காகவும் , அவருடைய ஜீவனுள்ள கைவேலையாக நாம் இருப்பதற்காகவும் நம்மை மீட்க வந்தார் (எபேசியர் 2:1-10). இந்தப் புதுப்பித்தலில் பரிசுத்த ஆவியானவர் நம்மை மறுரூபமாக்கும்போது , தேவன் நம்மை நிலைநிற்கும்கும்படி செய்கிறார் , பெலப்படுத்துகிறார், புதுப்பிக்கிறார். எனவே, கர்த்தராகிய இயேசுவின் ஊழியர்களாக நம்மை முதலில் தேவனுக்கு , பிறகு மற்றவர்களுக்கும் அர்ப்பணிப்போம் (2 கொரிந்தியர் 4:5). பின்னர், பரிசுத்த ஆவியானவர் நம்மை உள்ளும் புறமும் புதியவர்களாக ஜெனிபிக்கும்படி நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்ளலாம் !
என்னுடைய ஜெபம்
பிதாவே , நான் விஷயங்களை எப்படிப் பார்க்கிறேன், குறிப்பாக மக்களை எப்படிப் பார்க்கிறேன் என்பதில் என் பார்வையை புதுமையாக்க உமது கிருபையைக் கேட்டு உம் சமூகத்தில் வருகிறேன். தயவு செய்து என் இருதயத்தைச் சுத்தப்படுத்தி, என் மனதிலும், ஆத்துமாவிலும் என்னைப் புதிய மனிதனாக மாற்றியருளும் . இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் உம் அன்பைப் பகிர்ந்துகொண்டு, உம் பரிசுத்த ஆவியினால் அதிகாரம் பெற்று, உம் கிருபையை நித்தமும் அறிந்து வாழ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.