இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் வாழ்க்கைக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று தரிசித்து நடக்கலாம் அல்லது விசுவாசித்து நடக்கலாம். தேவனின் என்றென்றும் நிலைத்திருக்கும் சமூகம் மற்றும் வல்லமையில் நாம் விசுவாசம் வைக்கலாம் அல்லது நம்முடைய சொந்த வளங்களைச் சார்ந்து இருக்கலாம். ஆனால் ஐசுவரியம் , ஆரோக்கியம், அந்தஸ்து, புகழ் போன்ற காரியங்கள் அனைத்தும் அழிந்து காணாமற்போய்விடும் . ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே நமக்கு எப்போதும் நமக்கு இருக்கிறது, நாம் அவரைச் சார்ந்து இருக்க முடியும் என்பது நமக்கு நன்றாய் தெரியும், ஏனென்றால் நமக்கு முன்பாக வாழ்ந்த நம் முன்னோர் பலருக்கு அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. "நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்!"என்று சொல்லியிருக்கிறார், இந்த வார்த்தையை நாம் எப்பொழுதும் மனதிலே வைத்து மகிழ்வதில்லை.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள பிதாவே , இருக்கிறவராகவே இருப்பவர் , நாளை நான் அங்கு வந்து சேறுவதற்கு வருவதற்கு முன்னமே, நீர் அங்கு இருப்பதற்காக உமக்கு நன்றி. கடந்த காலங்களில் மற்றவர்கள் அனைவரும் என்னைக் கைவிட்டபோதும் நீர் என்னுடன் இருந்ததற்காக உமக்கு நன்றி.அடியேனோடு கூட இருக்கிறீர் என்பதை உணராமல் இருந்தபோதிலும், நான் கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது உமது கிருபையின் கரம் அவைகளை உறுதிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. உம் வாக்குறுதிகளை மெய்யாகவே விசுவாசிக்க எனக்கு மிகுந்த தைரியத்தை தாரும் , விசேஷமாக என்றென்றும் உம்முடனே இருப்பேன். "ஒருபோதும் கைவிடமாட்டேன் " என்னும் உம்முடைய வாக்குறுதி இன்று எனக்கு மிக மையமான வார்த்தையாக மாறிவிட்டது! உமக்கு கோடான கோடி நன்றி. உம்முடைய நேசக்குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.