இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்றைக்கான நமது வசனம், நமது பழைய வாழ்க்கை முறையைத் களைந்து போடுவதற்கான பவுலின் சவாலில் இருந்து வருகிறது (எபேசியர் 4:22-24). நேற்றைய தினம், நமது சிந்தனை மற்றும் ஊழிய முறைகளில் புதிய. மனுஷனாக இருக்க நம்மையே தேவனுக்கு முழுமையாக ஒப்புவித்தோம் . ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று நாம் என்ன ஆடையை அணிவோம் என்பதுதான். சரி, நம் சரீர ஆடைக்கு நாம் எதைத் தேர்வு செய்தாலும், தேவன் நம்மை மீண்டும் உருவாக்கிய புதிய நபரை அணிந்துகொள்வதை உறுதி செய்வோம், துர்இச்சைகளுக்கு இடமாக நம் சரீரத்தை பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். (ரோமர் 13:14; கலாத்தியர் 3:27), "உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும்" தேவனுக்காக வாழ உறுதியளித்த ஒருவர். அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். (ஏசாயா 61:10) இது நமக்கு என்றென்றும் பொருந்தும்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, இன்று என்னில் இயேசுவின் ககுணாதிசயத்தையும், சாயலையும் மக்கள் காணட்டும். கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தினாலே , தயவுக்கூர்ந்து எனது முடிவுகளை எடுக்க வழிநடத்தியருளும் , இன்னுமாய் இன்றைய சூழ்நிலைகளில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எனக்குத் தெரியப்படுத்ததியருளும் என்று உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். விலையேறப்பெற்ற மற்றும் வல்லமை வாய்ந்த பரிசுத்த ஆவியானவரே, தயவு செய்து என்னை உம் ஆவியினால் நிரப்பி, கிறிஸ்துவை நான் உடுத்திக்கொள்ள முற்படுகையில், உமது இரட்சிப்பின் வஸ்திரத்தை எண்ணி மகிழும்போது இயேசு தம்முடைய நீதியின் அங்கியை எனக்கு அணிவித்ததைப் போல என்னை மறுருபமாக்குவதில் உம் கிரியை என் வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து