இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முக்கிய குறிப்பு: இந்த ஆண்டு, உலக ஆங்கில காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் எங்கள் வசனக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளோம் - ஜனவரி 4 பிலிப்பியர் 1:4, அதுபோல ஜூன் 6ஆம் தேதி , எடுத்துக்காட்டாக, மத்தேயு 6:6 ஆக இருக்கும். இது நம்மிடம் முக்கியமான வசனங்களை நமக்குப் பிடித்தவையாகப் பார்ப்பதற்குச் சவால் விடுவதுடன், பரிசுத்த வேதாகமத்திலிருந்து நமக்குப் பிடித்த வசனங்களின் தொகுப்பாக மாற்றுவதைத் தடுக்கிறது. ஆண்டு முழுவதும் ஆறுதல், ஊக்கம்,உற்சாகம் , நம்பிக்கை மற்றும் விசுவாசம் நிறைந்த செய்திகளைக் காண்போம்! இந்தப் புதிய ஆண்டைத் தொடங்கும் போது, ​​நாம் யாருடன் இணைந்து ஊழியம் மற்றும் வீடுகள் சந்திப்பு செய்தோமோ அவர்களை நினைவுகூருவோம். நாம் அழைப்பதன் மூலம் சுவிசேஷகர்களாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருந்தால், எங்கள் ஆதரவாளர்களுக்கு ஸ்தோத்திர மற்றும் நன்றி ஜெபம் செய்ய உறுதியளிப்போம். நாம் உதவிகள் அளிக்கும் சபையில் உறுப்பினர்களாக இருந்தால், மற்ற தேசங்களில் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கும், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம் நாட்டில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் உதவி செய்ய முடிந்ததற்காக நன்றி செலுத்துவோம். தேவனுடைய மக்களுடன் சேர்ந்து தேவனுடைய ஊழியங்களில் பங்குகொள்வது உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதமும் மற்றும் பாக்கியமாகும் !

Thoughts on Today's Verse...



Special Note:
This year, we are basing our verse reference on the date as represented in the U.S. — January 4 is 1:4 from Philippians, and so June 6, for example, will be 6:6 from Matthew. This challenges us to look at important verses we might not have as our favorites and prevents us from turning the Bible into a set of our favorite slogans. We will find comforting, encouraging, motivating, convicting, and hope-filled messages throughout the year!



As we begin this new year, let's remember those with whom we are partnered in mission and outreach. If we are evangelists or cross-cultural workers for Jesus by calling, then let's commit to praying a prayer of praise and thanksgiving for our supporting partners. If we are members of a supporting congregation, then let's give thanks for being able to support those who share the Gospel in other places and those who work among different cultures and in different locations in our own countries. To share in God's work with God's people is truly a great blessing and privilege!

என்னுடைய ஜெபம்

எல்லா ஜனத்தின் தேவனே , உம் இரட்சிப்பின் கிருபையை அறியாதவர்களைச் சென்றடைவதில் உம் திருச்சபைக்கு யாவருடன் சேர்ந்து ஊழியம் செய்யும் உணர்வைத் தாரும். எல்லா இடங்களிலும் இயேசுவின் சத்தியத்தை அன்புடனும், தைரியத்துடனும், உண்மையுடனும் பகிர்ந்துகொள்பவர்களை ஆசீர்வதியுங்கள். ஒரே மெய்யான இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Father of all peoples, give your Church a greater sense of partnership in reaching those who do not know your saving grace. Bless those everywhere who share the truth of Jesus with love, courage, and faithfulness. In the name of the only true Savior, Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of பிலிப்பியர்-Philippians- 1:4-5

கருத்து