இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில நேரங்களில் " அழுத்தம் " இரட்சிப்பின் எண்ணத்தால் நாம் மிகவும் பயப்படுகிறோம், அன்பும் கிருபையும் இறுதியில் நம்மைச் கிரியைக்கு அழைக்கின்றன, பிரதிபலிப்புக்கு மட்டும் அல்ல என்பதை மறந்து விடுகிறோம். கிரியை என்றால் முயற்சி. அதைத்தான் பேதுரு நாம் மிக சரியாக செய்யும்படி அழைக்கிறார் - "ஒவ்வொரு முயற்சியும்." இந்த முயற்சி ஏன் அவசியமானது என்பதை அடுத்த சில வசனங்களில் பேதுரு நமக்கு விளக்குகிறார். "இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்," அவை உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே கனிகளை கொடுக்கும்படி செய்யும் {2பேதுரு 1:8-9} ! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக கனிக்கொடுக்கும்படி நாம் கையிட்டு "செய்யும் ஒவ்வொரு முயற்சியும்", அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நமக்குள் கிரியை செய்து ஆவிக்குரிய கனிகளை கொடுக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் மற்றும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் தாக்கத்தை உண்டுபண்ணும் ( கலாத்தியர் 5:22-25, 2கொரிந்தியர் 3:18 ).
என்னுடைய ஜெபம்
பிதாவே , உம் முழுமையான சித்தத்தின்படியாகவும், உம் குணாதிசயத்துடன் மிகவும் முழுமையாக ஒத்துப்போகும்படி அடியேனை வணைந்து உருவாக்கியருளும் . எனது மகிமைக்காக நான் இதை கேட்கவில்லை , ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் உம் ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பகிர்ந்து கொள்ள நீர் என்னை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.