இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் குளிக்கும்போது பாடுவீர்களா ? உங்கள் உதடுகளில் என்ன வார்த்தைகள் உள்ளது ? நீங்கள் தூங்கும்போது உங்கள் இருதயத்திற்கான ஒலிப்பதிவு என்ன? பாடுவது ஒரு அற்புதமான ஈவு! முதலாவதாக, நம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், துக்கத்தையும், அவருக்குள் பெற்ற வெற்றியையும் , இன்னுமாய் அவருக்கும் வெளிப்படுத்த உதவுவது தேவனின் ஈவாகும் . இரண்டாவதாக, தேவன் மீது நம்முடைய கனம் , பாராட்டு, அன்பு, நன்றி மற்றும் நம்பிக்கையைத் தொடர்புகொள்வதற்கு இது தேவன் நமக்கு கொடுத்த நல்ல ஈவாகும் . ஆகவே, தேவன் செய்த எல்லா காரியங்களுக்காக அவரைப் புகழ்ந்து பாடுவோம், அவர் என்ன செய்வார் என்று அறிவித்து, அவர் தற்போது நம் வாழ்வில் என்ன செய்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்வோம்! மேலும், கிறிஸ்துவுக்குள் நம் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் மற்றும் வாழ்க்கை கடுமையாக இருக்கும்போதும், நாம் சோர்வடையும் போது நமக்கு ஆறுதலளிக்கும் பாடல்களை (யோபு 35:10; சங்கீதம் 77:6) இரவில் நமக்குத் தரும்படி ஆவியானவரைக் கேட்போம்.

என்னுடைய ஜெபம்

தேவனே , பரலோகத்திலிருக்கிற என் பிதாவே, உமது நாமமும் பரிசுத்தமானது, ஆனாலும் நீர் என்னை அன்புடன் ஏற்றுக்கொள்ளுகிறீர் . நான் உம்மை ஆராதிக்கும்போது, ​​தயவு செய்து உமது விருப்பத்தை என் இதயத்தில் வைத்து வையும் , ஆதலால் நான் உனது பரிசுத்தமான தன்மையை இன்னும் நெருக்கமாக பிரதிபலிக்கிறேன். அன்புள்ள ஆண்டவரே, எனக்கு தினசரி தேவைப்படும் ஆகாரத்துக்காக நான் உம்மை நம்புகிறேன். பரிசுத்த பிதாவே , என்னை காயப்படுத்தியவர்கள் மீது நான் கொண்டிருந்த கசப்பையும் கோபத்தையும் நான் விடுவிக்கும்போது என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனே , சாத்தானின் சோதனைகள் மற்றும் வஞ்சகங்களை எதிர்க்க எனக்கு அதிகாரம் தாரும் . பரிசுத்த ஆவியானவரே, நான் துதிகளைப் பாடும்போது என் இருதயத்தை அன்பாலும், மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரப்பி, இரவில் உண்டாகும் பாடல்களினால் என்னை ஆறுதல்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து