இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவானவர் முதலாவது வந்தபொழுது அவர் பிதாவை வெளிப்படுத்தும்படியாய் வந்தார் (யோவான் 1:18). அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் எவ்வளவு அற்புதமானவர், வல்லமையுள்ளவர், கிருபையுள்ளவர் என்பதை காண்பித்து இருந்தார், அவர் யார் என்பதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. எங்கள் நம்பிக்கை அவருடைய இரண்டாம் வருகையோடு இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய இரண்டாம் வருகையிலே, அவர் தேவனை வெளிப்படுத்த வரமாட்டார் மாறாக தன்னையே வெளிப்படுத்தும்படியாய் வருவார் —ஒரு வெண் குதிரையின் மேல் ஜெய ஆண்டவராக வருவார், அப்பொழுது யாவருடைய முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் . அவர் மெய்யாகவும், பூரணராகவும் இருக்கிறவராக நாம் அவரைப் பார்ப்போம் — இம்மானுவேலரை நாம் வல்லமையிலும், கிருபையிலும், எல்லா வழியிலும் ஜெயம் பெற்றவராக பார்ப்போம். இயேசுவானவர் திரும்பி வரும்போது அவருடைய கிருபையில் நாம் நம்பிக்கை வைக்கும்போது, அதினால் இன்று நம் ராஜாவாகிய இயேசுவுக்கு கிரியையில் ஊழியம் செய்ய நாம் நம்பிக்கையுடன் ஆயத்தமாய் இருக்க முடியும் மற்றும் கீழ்படிதலோடும், துதியோடும் அவருடைய ஆசாரியத்தின் கீழாய் நாம் வாழ முடியும்.
Thoughts on Today's Verse...
When Jesus came the first time, he came to reveal God (John 1:18; Hebrews 1:1-3). As wonderful, powerful, and gracious as he was in his earthly ministry, he did not fully reveal all of who he is. Our hope is tied to his return. When he comes this time, he won't come to reveal God, but to reveal himself — the conquering Lord, the Rider on the white horse, our eternal Savior. Every knee will bow. We will get to see him as he really and fully is — Immanuel in power and grace, triumphant in every way. When we set our hope on Jesus' grace at his return, we can be confidently ready for active service to our king today. We can live under his leadership with obedience and praise today because we know that great tomorrow is coming!
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள பிதாவே , வல்லமையுள்ள தூதர்களுடனே இயேசுவானவர் வருகிறதை முகமுகமாய் காணும் நாளுக்காக நான் ஆவலாயிருக்கிறேன். அந்த நாள் வரையிலும், அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையின் நாளிலே அவரோடக்கூட மகிமையிலே பகிர்ந்துகொள்ள போகும் நம்பிக்கையிலே நான் என்னுடைய இருதயத்தை திடமாய் வைத்திருக்க உதவுங்கள். இயேசுவுக்குள்ளாய் ஜெயம் என்னுடையது என்பதை அறிந்தவனாக வாழ எனக்கு அதிகாரம் கொடுங்கள். இயேசுவின் வல்லமையான நாமத்தின் மூலமமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
O Almighty God, I long for the day when I get to see Jesus face to face, coming with the angels in power. Until that time, please fasten my heart in hope to the glory Jesus will share with me on that day, and please empower me to live as one who knows that victory is mine in Jesus beginning today. Jesus, through your powerful name I pray. Amen.



