இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று நீங்கள், எதை மிகத் தெளிவாக பார்க்கிறீர்கள்? காணப்படுகிறவைகளையா அல்லது காணப்படாதவைகளையா ? நமது விசுவாச முறை எதுவாக இருந்தாலும், காணப்படாதவைகளையே நாம் விசுவாசிக்க வேண்டும். தேவபக்தியற்ற அறிவியல் வல்லுனர்கள் கூட புவிஈர்ப்பு விசையை நம்புகிறார்கள் , காற்றை சுவாசிக்கிறார்கள் மற்றும் மனித ஞானத்தினால் நிலையான இவ்வுலகில் முடிவுகளை உருவாக்கும் வரை அவர்களால் பார்க்க முடியாத கொள்கைகளை சார்ந்துள்ளார்.ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம், காண்கின்ற இந்த உலகம், காணாத உலகத்தைப் போல மெய்யானது அல்லது நிலையானது என்று விசுவாசிப்பதில்லை. நாம் இப்பொழுது காண்கின்ற உலகமானது வியாதி , பேரழிவு, அழிந்துப்போகக்கூடிய , நிலையற்ற மற்றும் மரணத்திற்குட்பட்டது. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அது நித்தியமானவை இல்லை என்றால், அது மிகவும் மெய்யானதும் அல்ல. நாம் பற்றிக்கொள்ள ஏதாகிலும் ஒன்று வேண்டும். நாம் பார்க்கமுடியாத நம் பிதாவைக் கண்டுபிடிக்க நான் காண்கின்றதை கடந்தே பார்க்க வேண்டும். அவர் ஒருவரே கண்ணுக்கு புலன்படாதவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பவர்!

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே, எல்லா ஜனங்களின் தேவனே , ஆவிக்குரிய, நித்திய மற்றும் மெய்யான உலகத்தை இன்னும் தெளிவாகக் காணும்படி எனக்கு உதவியருளும் . நான் புதுமையைத் தேடவில்லை, வினோதமான சில தேடலில் இல்லை. நான் உம்மையும், உம் சத்தியத்தையும், உன் குணத்தையும் மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன், அதனால் நான் அவற்றை இன்னும் நேர்த்தியான முறையில் மற்றவர்களுக்குக் காண்பிப்பேன் மற்றும் கண்ணுக்குத் தெரியாத உலகில் உம்மைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவேன். உமது மகிமைக்காக, மற்றவர்களைச் விசாரிப்பதில் எனக்கு அதிக வெற்றியை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து