இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நமக்கு நிரந்தரமானதும் ,வற்றாததுமாய் இங்கே என்ன இருக்கிறது? தேவனுடைய கிருபையையும் தவிர வேறொன்றுமில்லையே . நாம் அவரை ஏமாற்றுவது , காயப்படுத்துவது , அவமதிப்பது அல்லது அவருக்கு எதிர்த்து நிற்பது போன்ற காரியங்களை நாம் செய்தாலும், அவர் இன்னும் நம்மை நேசிக்கிறவராகவே இருக்கிறார். நாம் பாவிகளாக இருக்கும்போதே பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்க இயேசுவை அனுப்பினார். நம் எதிர்காலத்தை குறித்து எவற்றின் மேலும் அல்லது யாரையும் ஏன் நம்ப வேண்டும்? தேவனுடைய கிருபையின் மீதே எப்பொழுதும் சார்ந்திருப்போம் !
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , அன்பான தேவனே , எனது நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் எதிர்காலத்தை உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கிறேன். நீர் என் நித்தியமான நன்மைக்காக நீர் கிரியை நடப்பிக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னை அடிமைப்படுத்துகிற எல்லாவற்றிலிருந்தும் நீர் மாத்திரமே மீட்பை அளிக்கிறீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்களை முற்றிலுமாய் மன்னித்து , உம்முடன் நித்திய காலமாக வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பான பிதாவே , உம் மாறாத அன்பிற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.