இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரவு முழுவதும் உங்களைத் நிர்மூலமாகாமல் வைத்தது எது? இன்று உங்களுக்கு என்ன கிடைக்கும்? வரவிருக்கும் நாட்களில் நீங்கள் சாதிக்க, செழித்து வளர எது உதவும்? தேவனின் மகத்தான அன்பு மாத்திரமே ! அன்பு, இரக்கம் மற்றும் உண்மை தன்மை ஆகிய அவருடைய எண்ணி முடியாத ஆதாரங்கள் மெய்யாகவே ஒருபோதும் தாழ்ச்சியடைவதில்லை! ஒவ்வொரு புதிய நாளும் அவருடைய கிருபை மற்றும் இரக்கதிலிருந்து அவர்களுடைய புதிய தேவைகளை சந்திகிறது . ஒவ்வொரு நாளும் அவை நம்மோடு இருப்பதை உறுதி செய்வதில் தேவன் எப்பொழுதும் உண்மையுள்ளவர். நம்முடைய உலகத்தை ஒவ்வொரு நாளும் புதியதாக்கி, அவருடன் நடக்க நம்மை அழைத்ததற்காகவும், அவருடைய அன்பு, இரக்கம் மற்றும் உண்மைத்தன்மையை எப்போதும் நம் அருகாமையிலேயே காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனும்,அன்பான பிதாவாய் இருக்கும் நீர் இரவு முழுவதும் என்னை ஆதரித்ததற்காகவும், என் வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் முடிவில்லா நாட்களை எனக்கு உறுதியளித்ததற்காகவும் உமக்கு நன்றி. என் பரலோகத்தின் தகப்பனே, உமக்காக அடியேன் செலுத்தும் அன்பையும் ஸ்தோத்திரத்தையும் எப்போதும் என் உதடுகளிலும் என் இதயத்திலும் நீர் அவைகளை காணலாம். ஒரே மெய்யான , அன்பான, இரக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள தேவனாக நீர் இருப்பதற்காக நான் உமக்கு நன்றிகளையும் மற்றும் துதி ஸ்தோத்திரங்களையும் இயேசுவின் நாமத்தினாலே சதாகலங்களிலும் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து