இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எருசலேமின் அழிவின் சாம்பலில் இருந்தும், தேவனுடைய மக்கள் மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமையின் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்தும் இந்த உண்மை நினைப்பூட்டுகிறது. பொறுமையுடன் காத்திருப்பவர்கள், பயத்துடனே நம்பிக்கை வைத்து, தேவனை தேடுபவர்கள் தங்கள் ஆத்துமாவின் ஆழமான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் . எனவே, நாம் அமைதல் உள்ளவர்களாக காத்திருக்கலாம், குறை கூறாமல், கர்த்தரிடமிருந்து வரும் நம் இரட்சிப்பை எதிர்பார்த்து காத்திருப்போம் !

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே தயவுக்கூர்ந்து எனக்கு பொறுமையையும் நம்பிக்கையையும் தாரும் , வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, ​​எல்லாமே எனக்கு எதிராக இருப்பதாகத் தோன்றும்போது, ​​நீர் கொடுக்கும் விடுதலைக்காக அமைதியாக காத்திருக்க எனக்கு உதவிச் செய்யும் . உமது வல்லமையுள்ள இரட்சிப்பை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருப்போருக்கு நீ நல்லவர் என்று நான் நம்புகிறேன். அன்புள்ள பிதாவே, நான் உமது இரட்சிப்பையும், உமது ஆசீர்வாதத்தையும் பெறுவேன் என்று நம்பி, விசுவாசத்தில் அமைதியாகக் காத்திருப்பதற்குத் தேவையான பெலத்தை எனக்குக் தாரும் . உம் குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து