இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எனக்கு ஒரு நண்பன் இருந்திருந்தால்." "என் அப்பா என்னை விட்டு போகமாலிருந்தால்." "அவள் இன்னும் ஆதரவாக இருந்திருந்தால்." "இருந்தால்..." மனிதர்கள் நம்மைத் தோல்வியடையச் செய்யலாம் மற்றும் தோல்வியடை செய்வார்கள் என்பதை நாம் ஆழமாக அறிந்திருந்தாலும், நாம் இன்னும் பல நம்பிக்கைகளை அவர்கள் மீது வைத்திருக்கிறோம் - அல்லது நம் வாழ்வில் சரியானவர்கள் இல்லாததால் நமது தோல்வியை சந்திக்கிறோம் என்று சாக்கு சொல்லுகிறோம் . இருப்பினும், மக்கள் நம்மைப் போலவே தவறுகிறவர்கள் மற்றும் மரணத்திற்குரியவர்கள். எனவே, நாம் மற்றவர்களின் வாழ்க்கையில் ஈடுபட்டு, இயேசுவுக்குள் மற்ற விசுவாசிகளுடன் இணைந்திருக்கும்போது, ​​​​"வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்" (2. தீமோத்தேயு 1:10) தேவனின் குமாரனுடன் நமது நம்பிக்கைகளை இணைக்க நினைவில் கொள்வோம் மேலும் அவர் நம்மை விட்டு விலகவும் மாட்டார், கைவிடவும் மாட்டார் (எபிரேயர் 13:5-6; ரோமர் 8:37-39).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , ஒரு குறிப்பிட்ட குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலோ அல்லது வேறொரு சிறப்பு நபரின் ஆதரவினாலோ எனது நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் நான் பின்னியிருந்தால் அதற்காக என்னை மன்னித்தருளும் . அதிலும் அன்பான பிதாவே , எனது பெலவீனங்களை நியாயப்படுத்தினததற்காகவும் , எனது கசப்பை மேற்கொள்ள தேவைப்படும் பெலனை கொடுக்கும் சரியான நபர்களை என் வாழ்க்கையில் நீர் தரவில்லை என்று நான் உம்மை குறை கூறினதற்காக நான் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஒரே நிலையான நம்பிக்கை இயேசுவுக்குள் மட்டுமே உள்ளது என்பது எனக்குத் தெரியும். எனவே, எப்பொழுதும் உண்மையுள்ள கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து