இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இப்போது புத்தாண்டில் ஒன்றரை வாரத்தை கடந்து இருக்கிறோம். இந்த வருடத்தில் நீங்கள் செய்த மாற்றங்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் தீர்மானங்களை எப்படிச் கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் முடிவெடுத்த பாதையில் நிலைத்து இருப்பதில் சிக்கல் இருந்தாலும், அவற்றைக் கைவிடாதீர்கள் அல்லது தள்ளி வைக்காதீர்கள் . இந்த வருடத்திற்கு ஒரே ஒரு அர்ப்பணிப்பு மட்டுமே அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: நாம் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தேவனிடம் கேட்டு, நாங்கள் அங்கு சென்று அதைச் செய்வோம். உம்முடைய பரிசுத்த ஆவியை கொண்டு நம்மை வழிநடத்தி, நம் அடிகளை நிலைநிறுத்தும்படி பரலோகத்தின் தேவனை வேண்டுவோம்!
Thoughts on Today's Verse...
We're now a week and a half into the new year. How are you doing with those changes, commitments, and resolutions you made for this year? Don't give up or quit on them, even if you're having trouble staying on track. Remember that only one commitment is essential for this year: Asking the Lord where he wants us to go and what he wants us to do, then we go there and do it. Let's ask the Lord to lead us by his Holy Spirit and establish our steps!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, என் அப்பா பிதாவே , அற்புதமாகவும், பரிசுத்தமாகவும், வல்லமையுடனும் இருப்பதற்காக நன்றி. என் மீதும், என் வாழ்க்கை மீதும், என் முடிவுகள் குறித்தும், என் போராட்டங்கள் குறித்தும் கனிவாக அக்கறை காட்டியதற்காக உமக்கு நன்றி. உமது வேதத்தைப் புரிந்துகொள்ளவும், என் வாழ்வுக்கான உமது விருப்பத்தை அறியவும் நான் முயலும்போது, உம் பரிசுத்த ஆவியினால் என்னை நித்தமும் வழிநடத்தும் . நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் நீர் முழுமையாக நிறுவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வழிகாட்டுதலை யாவும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.
My Prayer...
Holy God, almighty Lord, my Abba Father, thank you for being wondrous, holy, and mighty. Thank you for tenderly caring about me, my life, my decisions, and my struggles. Please guide me by your Holy Spirit as I seek to understand your Scriptures and discern your will for my life. I want to have you fully establish my steps. In Jesus' name, I ask for this guidance. Amen.