இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மகிழ்ச்சியுடனே நம்முடைய , கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாகிய ஆண்டவரைப் போற்றி, ஆனந்த சத்தமிடுவோம் . அதை இன்றே செய்வோம்! நாம் வாழும் நாட்களில் சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடித்து, அவற்றை எண்ணி எண்ணி , பரலோகத்தில் இருக்கும் நம் பிதாவிற்க்கு நன்றி மற்றும் துதிகளை செலுத்த அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம் . நம் முழு மனதுடனே முழு ஆத்துமாவுடனே மற்றும் உணர்ச்சியுடனே அவற்றை செய்வோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பதால், நமக்கு கொடுக்கப்படும் நேரத்தில் சிறிது நேரமாவது ஒதுக்கி, நம் தேவனை புகழ்ந்து போற்றுவோம் . இயேசுவுக்குள் தேவன் நமக்காகச் செய்த யாவற்றையும் சிந்தித்துப் பார்க்கையில், பரலோகத்தின் தேவனை துதித்து ஆனந்தக் சத்தமிடுவோம் . ஒவ்வொரு நல்ல விஷயத்திலும், நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பதால், குமாரனுக்காக நன்றி செலுத்தி, நம் கிருபையுள்ள பிதாவுக்கு துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் வார்த்தைகளாக பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்போம் !
என்னுடைய ஜெபம்
அன்பும் கிருபையும் நிறைந்த பிதாவே , கிருபையும் வல்லமையும் கொண்ட தேவனே , நீர் எனக்குத் தெரியப்படுத்துவதும், என் மனித வார்த்தைகளாலும் உணர்ச்சிகளாலும் உம்மைப் புகழ்வதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீர் அற்புதமான மற்றும் பரிசுத்தமான சிருஷ்டிகர் , இருப்பினும் உம் அழிந்து போகும் உயிரினங்களில் ஒன்றான நான் ( மனுஷன்) சொல்வதை தயவாய் கேட்கிறீர்கள். உமது கிருபை என்னைக் இரட்சித்தது , அதனால் நான் உம்மை உற்சாகத்துடன் போற்றுகிறேன்! உமது அன்பு இயேசுவிலுள்ள உமது கிருபையினாலும் உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் என்னை மறுபடியுமாய் ஜெனிபித்ததற்காக நான் நன்றி செலுத்துகிறேன் ! உம்முடைய பெலன் அடியேன் மறுருபமாகும் ஆற்றலை அளித்துள்ளது; உமக்காக நான் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறன் . நீர் அற்புதமானவர், அன்பான பிதாவே , நான் உம்மை முழு மனதுடன் நேசிக்கிறேன். உம்முடைய மாபெரிதான ஈவாகிய இயேசுவின் நாமத்தில் எனது நன்றிகளை , பாராட்டுக்களை மற்றும் மகிழ்ச்சியான போற்றுதல் யாவற்றையும் உமக்கு செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.