இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மகிழ்ச்சியுடனே நம்முடைய , கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாகிய ஆண்டவரைப் போற்றி, ஆனந்த சத்தமிடுவோம் . அதை இன்றே செய்வோம்! நாம் வாழும் நாட்களில் சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடித்து, அவற்றை எண்ணி எண்ணி , பரலோகத்தில் இருக்கும் நம் பிதாவிற்கு நன்றி மற்றும் துதிகளை செலுத்த அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம் . நம் முழு மனதுடனே முழு ஆத்துமாவுடனே மற்றும் உணர்ச்சியுடனே அவற்றை செய்வோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பதால், நமக்கு கொடுக்கப்படும் நேரத்தில் சிறிது நேரமாவது ஒதுக்கி, நம் தேவனை புகழ்ந்து போற்றுவோம் . இயேசுவுக்குள் தேவன் நமக்காகச் செய்த யாவற்றையும் சிந்தித்துப் பார்க்கையில், பரலோகத்தின் தேவனை துதித்து ஆனந்தக் சத்தமிடுவோம் . ஒவ்வொரு நல்ல விஷயத்திலும், நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பதால், குமாரனுக்காக நன்றி செலுத்தி, நம் கிருபையுள்ள பிதாவுக்கு துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் வார்த்தைகளாக பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்போம் !

Thoughts on Today's Verse...

With joy, let's praise and make a joyful noise to the Lord of lords and the King of kings. Let's do it today! Let's find short moments during our day, seize them, and use them to give thanks and praise to our Father in heaven. Let's do it audibly and passionately with all of our hearts. As we are blessed, let's take a moment and pause for praise. As we think about what God has done for us in Jesus, let's make a joyful shout of joyous praise to the Lord. In every good thing, let's share a phrase of praise to our gracious Father, giving thanks for the Son as we are filled with the Spirit!

என்னுடைய ஜெபம்

அன்பும் கிருபையும் நிறைந்த பிதாவே , கிருபையும் வல்லமையும் கொண்ட தேவனே , நீர் எனக்குத் தெரியப்படுத்துவதும், என் மனித வார்த்தைகளாலும் உணர்ச்சிகளாலும் உம்மைப் புகழ்வதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீர் அற்புதமான மற்றும் பரிசுத்தமான சிருஷ்டிகர் , இருப்பினும் உம் அழிந்து போகும் உயிரினங்களில் ஒன்றான நான் ( மனுஷன்) சொல்வதை தயவாய் கேட்கிறீர்கள். உமது கிருபை என்னை இரட்சித்தது , அதனால் நான் உம்மை உற்சாகத்துடன் போற்றுகிறேன்! உமது அன்பு இயேசுவிலுள்ள உமது கிருபையினாலும் உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் என்னை மறுபடியுமாய் ஜெநிப்பித்ததற்காக நான் நன்றி செலுத்துகிறேன் ! உம்முடைய பெலன் அடியேன் மறுரூபமாகும் ஆற்றலை அளித்துள்ளது; உமக்காக நான் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறன் . நீர் அற்புதமானவர், அன்பான பிதாவே , நான் உம்மை முழு மனதுடன் நேசிக்கிறேன். உம்முடைய மாபெரிதான ஈவாகிய இயேசுவின் நாமத்தில் எனது நன்றிகளை , பாராட்டுக்களை மற்றும் மகிழ்ச்சியான போற்றுதல் யாவற்றையும் உமக்கு செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Loving and gracious Father, God of mercy and might, I find it incredible that you let me know you and praise you with my human words and emotions. You are the marvelous and holy Creator, yet you graciously listen to me, one of your mortal creatures. Your mercy saved me, so I enthusiastically praise you! Your love has remade me by your grace in Jesus and through the power of your Holy Spirit; I thank you! Your strength has given me the power to change; I shout for joy because of you. You are wonderful, dear Father, and I love you with all my heart. I offer you all of my thanks, praise, and joyous appreciation in the name of Jesus, your greatest gift. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம்-Psalms  100:1

கருத்து