இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபையிலே மற்றும் பிரகாரங்களில் மாத்திரம் பாடுவதோடு நிறுத்திவிடாதீர்கள். தொழுகை என்பது , நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது (ரோமர் 12:1-2; மத்தேயு 22:36-40), தேவன் இயேசுவுக்குள் நமக்காகச் செய்ததற்காக நமது மகிழ்ச்சியின் அடிப்படையில் (ரோமர் 5:6-11) செய்வதாகும் . தேவனுக்கு நன்றியையும் துதியையும் பாடி இன்றளவை மகிழ்ச்சியான பாடல்களின் நாளாக மாற்றுவோம்!

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகப் பிதாவே , உம் மனித உயிரினங்களுக்கு ராகங்களை ஈவாக வழங்கியதற்காக உமக்கு நன்றி. எங்கள் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் துதி பாடல்களை எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் வரங்களை அநேகருக்கு கொடுத்ததற்காக நன்றி. உம் மீதான எங்கள் அன்பையும், நீர் செய்யும் யாவற்றிற்காகவும் , இன்னுமாய் நீர் எங்களுக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக எங்கள் மனமார்ந்த நன்றியைக் காண்பிக்க , "மகிழ்ச்சியான பாடல்களை" நாங்கள் கேட்கும்போதும், பாடும்போதும் எங்கள் துதி கீதங்களால் நீர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றியும் புகழும் செலுத்தி ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து