இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஒன்று. அடிப்படையான , எளிமையான மற்றும் புரிந்துகொள்ள எளிதானது.நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசம், ஞானஸ்நானம் மூலமாய் கிறிஸ்தவர்களானப்போது , உலகெங்கிலும் உள்ள மற்ற எல்லா கிறிஸ்தவர்களுடனும் நாம் ஒன்றாக சேர்க்கப்படுகிறோம் .இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து இவை அனைத்தும் போய்விட்டது. எஞ்சியிருப்பது ஒருவர் மாத்திரமே , அந்த ஒருவர் இயேசு ஒருவரே . நம்முடைய வாழ்க்கை அவருடையது, இதனால் ஒருவருக்கொருவர் இசைந்த கணுக்களாய் இணைக்கப்பட்டுள்ளோம் . நம்முடைய முடிவும் அந்த பரலோகமே. நம்முடைய குடும்பம் நம் திருச்சபையே. அடைக்கப்பட்ட வழியோ, தடையோ கிடையாது. நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , என்னை உம்முடைய குடும்பத்தில் தத்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் அனைவரும் இப்போது பூமியில் ஒன்றாக இருப்பது போல, பரலோகத்திலும் உமது சிங்காசனத்தைச் சுற்றி ஒன்றாக இணைந்து இருக்க உதவிச் செய்யும் . உம் நாமத்தை கூப்பிட்டு, உம் ஆவியைப் பகிர்ந்துகொள்பவர்களிடையே ஒற்றுமைக்காக நான் ஜெபிக்க உதவிச் செய்யும் , அதனால் மோதல்கள், சண்டைகள் மற்றும் பிளவுகளுக்கு ஒரு தீர்வு இருப்பதை உலகம் அறியும். எங்கள் இரட்சகராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.