இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் தாயின் வயிற்றில் உருவாகுவதற்கு முன்னமே அவரே நம்மை நம்மை உண்டாக்கி அறிந்திருக்கிறார் . அவர் நம்மை அன்போடு அக்கறையுடனும், நம் வாழ்க்கைக்கான ஒரு நோக்கத்துடனும், நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் நம்முடன் இருப்பார் என்ற வாக்குறுதியுடனும் செய்தார் (சங்கீதம் 139:1-18). சிறந்த மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை கவனித்துக்கொள்வதை விட தேவன் நம்மை மிகவும் அதிகமாய் கவனித்துக்கொள்கிறார். ஆகவே, நமது தலைவனை , சிருஷ்டிகரை , மேய்ப்பனை மற்றும் ராஜாவை அறிந்தவர்களாகவும், அவர் நம்மை நெருக்கமாக அறிந்தவராகவும் வாழ்வோம், அதனால் அவருடைய குணாதிசயத்தை வெளிப்படுத்தவும், அவருடைய கிருபையை பகிர்ந்து கொள்ளவும், அவருடைய இரக்கத்தை நீட்டிக்கவும், மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்கவும் முடியும். நாம் தேவனுடைய மக்கள் என்பதையும், வலிமையான ஆனால் இரக்கமுள்ள மேய்ப்பனிடமிருந்து மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள கற்றுக்கொண்டோம் என்பதையும் இவ்வுலகிற்க்கு காண்பிப்போம் !
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , நீரே என் நல்ல மேய்ப்பர், பிதா மற்றும் என் உன்னத மாதிரி என்பதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் உம் குணத்தையும் கிருபையையும் காட்ட முயலும் போது தயவுசெய்து எனக்கு அதிகாரம் தாரும் . ஆடுகளின் பெரிய மேய்ப்பனை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எனவே உம் அன்பு, இரக்கம் , வழிகாட்டுதல், பாதுகாப்பு, கண்டிப்பு மற்றும் கவனிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே , இதைச் செய்ய உம் உதவியைக் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்