இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒருவருக்கொருவர் தியாக மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் கனம் பண்ணவேண்டும். இந்த சினேகத்திலே பட்சமாயும், மற்றவர்களை கனப்படுத்துவதுமாகிய ஆகிய இவ்விரண்டு காரியங்களும் சத்தியத்தின் அடிப்படையாகவும், மையமாகவும் காணப்படுகிறது எப்படியென்றால் : தேவனானவர் நம்முடைய பிதா என்பதால், நாம் ஒரே குடும்பமாகவும் . தேவனுடைய ராஜ்யத்தில் நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளாயும் இருக்கிறோம் . நம்முடைய உறவு நித்தியமானது மற்றும் தேவனுடைய கிருபையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் நம்முடைய அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்த ஏதுவாயிருக்கிறது .

என்னுடைய ஜெபம்

என்னுடைய ஆத்துமாவின் நல்மேய்ப்பரே, அடியேனை உம்முடைய குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக மாற்றியதற்காக உமக்கு நன்றி. பல ஆண்டுகளாக என் வாழ்க்கையை ஆசீர்வதித்த கிறிஸ்துவுக்குள் அற்புதமான சகோதர சகோதரிகளுக்காக நன்றி. தங்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்த மேன்மையான மக்கள் என்னை ஆசீர்வதித்து கனப்படுத்தியது போல, உம்முடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் ஆசீர்வதிக்க என்னை எடுத்து பயன்படுத்தியருளும் . உம்முடைய நேச குமாரனும் என் மூத்த சகோதரனுமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து