இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
100 ஆம் சங்கீதத்தில் தொழுது கொள்ளுவதற்கான அழைப்பை நாம் தொடர்ந்து சிந்திக்கும்போது, இன்றைய அறிவுரை எருசலேமில் தேவனின் கையினால் கட்டப்பட்ட தேவஆலயம் இருந்த நாட்களில் இருந்து வருகிறது என்பதை நாம் உணர்கிறோம். தேவனின் புதிய உடன்படிக்கை மக்களாகிய நமக்கு, தேவனின் ஆலயம் இயேசுவின் சரீரமாகிய சபை (1 கொரிந்தியர் 3:16) அத்துடனே நம்முடைய மாம்ச சரீரம் (1 கொரிந்தியர் 6:19). சபை குடும்பமாக நாம் கூடி தொழுதுக்கொள்ளும் போது நமது சபையின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்தும் போது தேவனின் நற்குணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நாமாகவே நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து , பரிசுத்தமாக, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை கனப்படுத்தவும், தொழுது கொள்ளும் நம் வாழ்கையில், நம் சரீரம் முழுவதுமாக அவருக்குச் ஒப்புக்கொடுத்து தேவனை மகிமைப்படுத்துவோம் (ரோமர் 12:1-2; 1 கொரிந்தியர் 6:20) (எபிரேயர் 12:28- 13:16)! பொது வெளியிலும், தனிப்பட்ட முறையிலும், சமூகத்திலும் தேவனின் நாமத்தை போற்றுவோம். நாம் ஒவ்வொருவரும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் நம்முடைய தேவனை நேசிப்போம், ஆராதிப்போம் (மத்தேயு 22:18-20).
என்னுடைய ஜெபம்
பிதாவே, இயேசுவின் பிரசன்னம் மற்றும் பரிந்துபேசுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் அங்கீகாரம் மற்றும் பிரசன்னம் ஆகியவற்றின் மூலம் நாங்கள் உம்மை அணுகும்போது உமது பிரசன்னத்தின் மிக பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைகிறோம். நாங்கள் துதி பாடல்களைப் பாடும்போது எங்கள் இருதயங்களுக்குச் நீர் செவிசாய்ப்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நன்றியறிதலுடனும், ஸ்தோத்திரத்துடனும் நாங்கள் உம் சமூகத்தில் வரும்போது, உம் பிரசன்னதில் எங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உம்மோடு இருப்பதில் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியடைகிறோம், எங்களுக்காக நீர் செய்த அனைத்தையும் நாங்கள் எவ்வளவு போற்றுகிறோம் என்பதை உமக்கு எங்கள் வாயின் வார்த்தைகளினால் சொல்கிறோம். நாங்கள் உம்முடைய பரலோக வீட்டிற்கு வந்து உம்மை மிகவும் மகிழ்ச்சியுடன் முகமுகமாய் பார்க்கும் வரை இந்த இடத்தில் மற்றும் பிரார்த்தனை நேரத்தில் எங்களை சந்தித்ததற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , நாங்கள் உம்மை துதித்து , அந்த மகிமையான நாளை எதிர்பார்த்து, ஜெபிக்கிறோம் . ஆமென்.