இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா, அதை நிறைவேற்ற இந்த காரியம் மிக கடினமான விஷயம் , இல்லையா! இயேசு தம்முடைய சீஷர்களின் கால்களை கழுவினார். அடுத்த சில மணிநேரங்களில், யூதாஸ் அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான் , பேதுரு அவரை மூன்று முறை மறுதளித்தார் , மற்ற 10 சீஷர்களும் அவரைக் கைவிட்டு தனியே மரிக்கும்படி விட்டுவிட்டு சென்றார்கள் . ஆனாலும் அவர்கள் இதைச் செய்வார்கள் என்று தெரிந்தும் இயேசு அவர்களுடைய கால்களைக் கழுவினார். அவர்கள் தன்னை மறுதலித்து கைவிடுவார்கள் என்று அறிந்தும் அவர்களுக்காக அவர் சிலுவையிலே மரிக்கும்படி சென்றார் . என்னால் அப்படி அன்புக்கூற முடியுமா என்று தெரியவில்லை.... இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் உதவியால், என்னை காயப்படுத்திய மற்றும் வஞ்சித்த மற்றவர்களை நேசிப்பதில் நான் ஒரு புதிய மாற்றங்களையும் மேற்கொள்வேன். நான் மற்றவர்களை காயப்படுத்தி இன்னுமாய் வஞ்சித்த உறவுகளை சீர்படுத்தவும் முயற்சிப்பேன் .

என்னுடைய ஜெபம்

சத்தியமுள்ள பிதாவே , உம்முடைய முடிவில்லாத அன்பிற்காக உமக்கு நன்றி. தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி, என் இருதயத்தில் உமது அன்பை ஊற்றி, இயேசு என்னை நேசித்தது போல நானும் மற்றவர்களை நேசிக்க உதவியருளும் . என்னை வஞ்சித்து காயப்படுத்தியவர்களை நேசிக்க எனக்கு உதவிச் செய்தருளும் . தேவனே , என்னுடைய மன கசப்பினாலோ அல்லது வெறுப்பினாலோ யாரோ ஒருவர் உமக்கு ஊழியம் செய்வதும் , அவர்கள் மூலமாய் இயேசுவின் கிருபையை மற்றவர்கள் அறிந்து கொள்வதும் எனக்கு விருப்பமில்லை மாறாக அதை அடியேனே செய்ய விரும்புகிறேன் . என் அன்பான இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து