இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சங்கீதம் 100:5 ஆம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட இறுதி வசனப் பகுதியின் சிந்தனைக்கு வந்திருக்கிறோம் . எல்லா தலைமுறைகளிலும் தொடரும் தேவனின் நீடித்த அன்பு மற்றும் நீதியின் மேல் கவனம் செலுத்தப்படுகிறது. மத்தேயு 1:1-16 ஆம் வசனம் வரை இயேசுவானவரின் வம்சவரலாறு, நம்முடைய கர்த்தரும் மேசியாவுமான இயேசுவை நமக்குக் கொண்டுவர தேவன் பயன்படுத்திய தலைமுறைகளைப் பற்றிய பட்டியலை நாம் அங்கே பார்க்கிறோம் . நான் பொதுவாக பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வம்சாவளியை வேகமாகப் படிப்பேன். இருப்பினும், அந்த தலைமுறைகள் மூலம் நமக்கு மேசியாவைக் கொண்டு வந்த தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் கொண்டாட இந்த வம்சாவளியின் மூலம் நம்மை அனல் மூட்டி எழுப்ப பரிசுத்த ஆவியானவரை கேட்போம் . கர்த்தருடைய உண்மையுள்ள அன்பு இந்தத் தலைமுறைகளில் தொடர்ந்து இருந்து, இயேசுவின் மூலமாக நம்மை இரட்சித்தது என்பதை அறியும் மகிழ்ச்சியுடன் சங்கீதம் 100:1-5 ஆம் அதிகாரத்தில் உள்ள வசனங்களை தியானித்து முடிக்கலாம். கடந்த காலத்தில் தேவன் எவ்வளவு உண்மையாகச் செய்தாரோ, அவருடைய குமாரனும் நம் இரட்சகருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான வருகைக்காக நாம் காத்திருக்கையில், வரும் நாட்களில் இன்னும் அதிகமாகச் செய்வார். பிதா தம் உண்மைத்தன்மையின் மூலம் குமாரனை நமக்குக் கொண்டுவந்தார், மேலும் சங்கீதம் 100:5-ன் பரிசுத்த ஆவியின் ஏவப்பட்ட துதியின் வல்லமையால் அந்த நிலையான அன்பைக் கொண்டாடுகிறோம்: கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , மாறும் மற்றும் துரோகம் நிறைந்த நாங்கள் வாழும் உலகில், நான் நம்பிக்கையோட சார்ந்திருக்கக்கூடியவர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், எல்லோரும் என்னிடமிருந்தோ அல்லது என் மூலமாய் எதையாவது விரும்புவதாகத் தோன்றுகிறது. உம் மாறாத அன்புக்கு நன்றி, இது மலைகளை விட நிலையானது மற்றும் எந்த அழகான சூரிய உதயத்தை விட மகிமையும் கொண்டது. உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே உம்மை போற்றி துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.