இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வயது முதிர்ந்ததை குறித்துப் பற்றி நாம் கேலி செய்யும் போது, வயதுச்சென்ற சவால்கள் கடினமானவை. நம்முடைய மரணத்தை நாம் உணருகிறோம். நம் சரீரம் நம்மை கைவிட்டு விடலாம் . ஒரு காலத்தில் நம்மால் செய்ய முடிந்ததை இப்பொழுது செய்ய இயலாமல் போகலாம் . கிறிஸ்தவர்களாகிய நாம், நமது வயது முதிர்ந்த காலம் உண்மையில் நம்மை நித்திய வீட்டிற்கு நெருக்கமாகவும், அழியாத மேனியை இயேசுவானவர் நமக்குக் கொடுக்கும் காலத்தையும் நாம் நெருங்குகிறோம் என்பதை நாம் அறிந்துக்கொள்ளுவோம் . மிக முக்கியமாக பரலோக காரியங்களின் நினைவூட்டல்களாக இருக்க, இந்த ஜென்மசரீரத்தின் சத்தியத்தை பயன்படுத்தி தேவன் நமக்கு உதவ முடியும், எப்படியென்றால் அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியால், நாம் நம்முடைய இரட்சகரைப் போலாகி , நம்முடைய பரலோக வீட்டிலே ஜீவிக்க ஆயத்தமாக இருக்கவும் மறுரூபமாகலாம் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , என்னுடைய வயது முதிர்ந்த நாட்கள் அதிகமாகுவதை விரும்புகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். எவ்வாறாயினும், ஒவ்வொரு நாளும் என்னுடைய வயது முதிர்ந்த நாட்கள் கூடும்போழுது , அடியேன் உம்மிடம் இன்னு நெருங்கி வருவதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் வயதாகும்போது நம்பிக்கையற்றவனாகவோ , விடாய்த்து போன மனிதனாகவோ அல்லது கசப்பான எண்ணம் கொண்டவனாய் மாறாமல் இருக்க தயவுசெய்து எனக்கு உதவியருளும் . அதற்குப் பதிலாக, தயவுக்கூர்ந்து என்னைப் புதுப்பித்து, உம்முடைய நித்திய வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய மற்றவர்களை ஆசீர்வதிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.