இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துரு கறை, புல் கறை, ரத்த கறை, சாக்லேட் கறை. ஏமாற்றம் ! அந்த கறைகள் சலவை அறையில் உண்மையான சோதனை . அவை துணியின் மேற்பரப்பில் மட்டும் கறையை ஏற்படுத்தி விடாது, அவை நம் ஆடைகளின் இழைகளில் ஊடுருவி ஒரு கடினமான ஒரு திட்டை விட்டுவிடுகின்றன. அதுபோல தீமையான காரியங்கள் நம் ஆத்துமாவுக்கு உண்டுபண்ணுகிறது . அதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீமை அசுத்தமாக்கும் , அது தொடும் மற்றும் ஊடுருவும் அனைத்தையும் சிதைத்து அசுத்தத்தை விட்டுச்செல்கிறது - கண்ணியமான மக்கள் என்று சொல்லப்படும் இருதயங்கள் உட்பட. அதனால்தான் தீமையிலிருந்து வெகு தொலைவில் இருக்கவும், அதின் எந்த ஒரு தோற்றத்தை தவிர்க்கவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம். அதனால் தான் இயேசுவானவர் மரித்தார் : சாத்தனை ஜெயிக்கவும் மாத்திரமல்ல , எல்லா கறைகளையும் அகற்றி, அதின் எச்சங்கள் அனைத்திலிருந்தும் நம் இருதயங்களைத் தூய்மைப்படுத்தவும் அப்படி செய்தார் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் பாதையைக் காத்து, என் வாழ்க்கையை தீமையிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு நல்ல கிறிஸ்தவ நண்பர்களை எனக்கு தாரும் . மேலும் , அன்பான பிதாவே , என்னைச் சுற்றியுள்ள தீயவர்களின் அழிவுகரமான மற்றும் ஏமாற்றும் பிடியில் சிக்கியவர்களுடன் கிறிஸ்துவினால் சுத்திகரிக்கப்பட்டு மற்றும் விடுவிக்கும் வல்லமையை பகிர்ந்து கொள்ள நான் முயலும்போது தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து