இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? எளிமையானது! அவர்களுடைய வாழ்க்கையின் கனிகளை சரிபார்க்கும்படி இயேசுவானவர் கூறினார் . மக்களின் வாழ்கையில் அவர்களுடைய கனிகள் மிகவும் புலப்படும் வடிவங்களில் ஒன்று அவர்கள் பேசும் வார்த்தை , அவர்கள் பேசும் தன்மை மற்றும் அவர்கள் எப்படி பேசுகிறார்கள் அவர்களின் கனிவான வார்த்தைகளின் மூலமாய் காணப்படுகிறது. நீதிமான்கள் தாங்கள் சொல்வதன் மூலம் வாழ்வைப் பெறுவதற்கான வழிகளைக் காண்கிறார்கள். துன்மார்க்கர்கள் தாங்கள் பேசுகின்ற வார்த்தை மற்றும் அவர்கள் பேசும் தோரணையை வைத்து தங்களை வெளிப்படுத்துகிறார்கள். கசப்பு, கிண்டல் மற்றும் கேலி நிறைந்த சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் நம் உலகில், இது நாம் கவனிக்க வேண்டிய நிரூபணம்!
என்னுடைய ஜெபம்
கர்த்தராகிய ஆண்டவரே, சங்கீதக்காரனின் வார்த்தைகளை உமக்கு என் மனப்பூர்வமான ஜெபமாக நான் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, தயவுசெய்து என் கூக்குரலை கேளும் : என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம்- 19 :14 இயேசுவின் நாமத்தினாலே நான் இதைக் கேட்கிறேன். ஆமென். * சங்கீதம் 19:14