இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் " பரிசுத்த ஆவியின் வல்லமையின் வாக்குறுதிகளை நான் விசுவாசிக்கிறேன் . நான் இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை ஆவியானவரின் கிரியை மூலமாக அனுபவித்திருக்கிறேன், என் மூலமாக ஊழியத்தை செயல்படுத்த என்னை பெலப்படுத்துகிறது , சவாலான சூழ்நிலைகளில் மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவி செய்கிறது , நான் உடைந்திருக்கும்போது என்னை ஆறுதல்படுத்துகிறது , நான் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது எனக்கு அனந்த ஞானத்தை கொடுக்கிறது , சோதனையின்போது என்னைப் பெலப்படுத்துகிது . இப்படிப்பட்டதான நேரங்களில் ஆவியின் கிரியையை நான் அனுபவிக்கும் போது, நான் தாழ்மையடைந்து, மெய் சிலிர்த்து, மேலும் அதற்காக ஏங்குகிறேன். இன்னுமாய் அடியேன் நேசிக்கும் மற்றவர்கள் இந்த மாபெரும் வல்லமையை அனுபவிக்காதவர்கள் அவைகளை அனுபவிக்க வேண்டுமென்று என்று நான் விரும்புகிறேன். இந்த வல்லமையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜெபிப்பதும், அவர் அவர்களுக்காக ஜெபித்ததை அவர்களும் அறியவேண்டுமென்று பவுலானவர் எண்ணினார் என்று எனக்குத் தெரியும். எனவே, அதைத்தான் நானும் செய்கிறேன். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கானோர் ஜெபம் செய்யும் போது என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உங்களையும் அழைக்கிறேன். நமக்கு மிக நெருக்கமானவர்கள் இந்த வல்லமையைக் கண்டறியவும், அவர்களுக்குள் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்கள் பெரிய காரியங்களைச் நடப்பிக்க தேவனிடம் ஜெபிப்போம்.
என்னுடைய ஜெபம்
அன்பான தேவனே , சர்வவல்லமையுள்ள பிதாவே , பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக உமக்காகவும், உம் மகிமைக்காகவும் வாழ இன்று எனக்கு அதிகாரத்தை தாரும் . தயவு செய்து உம் குடும்பமாகிய திருச்சபையில் உள்ளவர்களை ஆசீர்வதிக்கவும், அதினால் அவர்கள் ஆவியின் கிரியையை தங்கள் வாழ்க்கையிலும் இன்னுமாய் மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதிலும் அனுபவிக்க முடியும். பாவம், மரணம் மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து மரணத்தின் வல்லமையை தகர்க்க நீர் பயன்படுத்திய பரிசுத்த ஆவியின் வல்லமையை நாங்களும் அனுபவிப்போம். பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் வல்லமையை நாம் அனுபவித்து, மற்றவர்களை மகிமைப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் அதைப் பயன்படுத்துவோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.