இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு அற்புதமான உலகில் நாம் வாழ்கிறோம்! ஆகாய விரிவு தாழ்மையாக இருக்கிறது. மலைச் சிகரங்களின் உயரம் நம்மை வியப்படைய செய்கிறது . ஒவ்வொரு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஒரு புதிய கிருபையின் அழகை வெளிப்படுத்துகிறது . இப்பிரபஞ்சத்தின் அனைத்து அழகான, அற்புதமான மற்றும் பிரமிக்க வைக்கும் அதிசயங்களை விவரித்துக் கொண்டே போகலாம். பிரபஞ்சத்தின் பல்வேறு, ஒழுங்கு, சமச்சீர் மற்றும் ஆச்சரியங்கள் அனைத்தும் அதன் பின்னால் உள்ள தேவாதி தேவனுக்கு சாட்சியமளிக்கின்றன. தேவன் நம்மை உண்டாக்கியதில் தம் கரத்தின் கிரியைகளின் மகிமையை வைத்துப்போனார் , அதனால் நாம் "அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்'" (அப் 17:27-28).

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, சர்வவல்லமையுள்ள தேவனே , உமது சிருஷ்டிப்புகள் யாவும் உம்முடைய மகத்துவம், கிருபை , அதிசயம், பிரமிப்பு மற்றும் அழகு ஆகியவற்றால் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. வியக்க வைக்கும் உலகில் உம் கரத்தின் வல்லமையை மிகத் தெளிவாகப் பார்க்க வைத்ததற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , நான் உம்மைப் போற்றி நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து