இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்து பாவிகளுக்காக மரித்தார். அது நாம் தான்! இயேசுவுக்கு முன்னமே நாம் இந்த மெய்யான சத்தியத்தில் சேர்க்கப்பட்டோம்! கிறிஸ்து எனக்காகவும், உங்களுக்காகவும், நீங்கள் நேசிப்பவர்களுக்காகவும், உங்களை நேசிக்காதவர்களுக்காகவும் மரித்தார். இயேசுவின் தியாக மரணம் மற்றும் தேவனுடைய அற்புதமான கிருபை இல்லாமல், நாம் ஒருபோதும் நம் செயல்களால் நம்மைக் இரட்சிக்கவோ அல்லது நம்மை முழுமையாக நீதிமான்களாக்கவோ முடியாது. நம்மால் செய்ய முடியாததை இயேசு நமக்காகச் செய்தார்: அவர் ஒரு பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்து, நம்முடைய பாவத்தின் கடனை அடைக்க ஒரு பயங்கரமான மரணத்தை சந்தித்தார் - செலுத்துவதற்கு நமக்கு சக்தி அல்லது வளங்கள் இல்லை. அவர் நமக்காக இதைச் செய்தார், அவருடைய தியாகத்திற்கு நாம் தகுதியானவர்களாக இருந்ததால் அல்ல, ஆனால் அவர் இல்லாமல் நாம் தகுதியானவர்களாக இருக்க முடியாது.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். தியாக இரட்சகரே, நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். பரிசுத்த ஆவியானவரே, உமது வல்லமையால் நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு பாராட்டின கிருபையின் ஈவுக்காக நீர் கொடுத்த பெரிய விலை அது எங்களுக்கும் மிகவும் அரிதான காரியம் ஆகையால் அதற்கு நாங்கள் எங்கள் நன்றியை வார்த்தைகளால் போதுமானதாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியாது. சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பிதாவாகிய தேவனே, சிலுவையில் ஏறிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, மாற்றப்பட்ட வாழ்க்கையை வாழ எங்களுக்கு அதிகாரமளிக்கும் பரிசுத்த ஆவியானவரே, உமக்கு எல்லா மகிமையையும், கனமும் , ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம். அன்பான பிதாவே, உம்முடைய சமூகத்தில் கிட்டி சேர அவருடைய கிருபை மற்றும் அவருடைய அதிகாரm எங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறது. ஆவியின் வழிநடத்துதலினால் இயேசுவின் முலம் ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து