இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தில் உற்சாகமளிக்கும் ஒரு வார்த்தை இன்றியமையாதது, குறிப்பாக தேவனானவர் தங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவதற்கு மக்கள் பெரும் ஆபத்து நிறைந்த பயணத்தை மேற்க்கொள்ள வேண்டியது அவசியமாகிறது . நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு, மக்கள் இப்போது தங்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு , வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு மோசேயைப் பின்பற்றி செல்ல வேண்டும். பத்து வாதைகள், செங்கடலைப் பிரித்தல் மற்றும் மலையில் வழங்கப்பட்ட கற்பலகை - தேவனுடைய சட்டம் - ஆகியவற்றின் மூலம் தேவனின் மாபெரும் இரட்சிப்பை அவர்கள் அனுபவித்தனர். ஜனங்கள் தைரியமாக இருந்து , தேவனானவர் வாக்களித்த ஐசுவரியமான காரியங்களை பெற்றுக்கொள்ள மோசேவானவர் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். என் நண்பரே, நாம் நம் காலத்தில் இதே போன்ற இடத்தில் நிற்கிறோம். நமது உலகம் சிதைந்து, குழப்பத்தில் இருப்பதால், பயமும் ஊக்கமும் இல்லாமல் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதும் அவருடைய வாக்குறுதிகளை பற்றிக்கொண்டு வாழ்வது இப்பொழுது நம் மீது வீழ்ந்த கடமையாகும் . அவநம்பிக்கையில் மூழ்குவதற்குப் பதிலாக, நம் இருண்ட உலகில் தேவனுடைய ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம் (மத்தேயு 5:14-16; பிலிப்பியர் 2:14). எதிர்காலத்தை நம் நன்மைக்காகவும் மற்றும் தேவனுக்காக ஊழியம் செய்ய சிறந்த வாய்ப்பாக இந்த சவாலை ஏற்றுக்கொள்வோம்!
என்னுடைய ஜெபம்
மாறிவரும் பொறுப்புகள் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை அடியேன் எதிர்கொள்ளும் போது, பரலோகத்தின் தேவனே , தயவுக்கூர்ந்து உம் வாக்குத்தத்தங்களை எனக்கு நினைப்பூட்டுங்கள், உம் அனந்த பிரசன்னத்தினால் என் பயத்தை நீக்கி, உம் பரிசுத்த ஆவியினால் என் தீர்மானத்தை பெலப்படுத்துங்கள், உமது பரிசுத்த வார்த்தைக்கு அடியேன் முற்றிலுமாய் கீழ்ப்படிவதால் உம் சித்தத்தின்படி என்னை எப்பொழுதும் வழிநடத்துங்கள். நான் அனுபவிக்கும் வெற்றிகள் யாவும் உமக்கு மகிமையையும், கனத்தையும் கொண்டு வரட்டும். அன்புள்ள பிதாவே , எனது சாதனைகள் மற்றும் என் பெலன் யாவற்றிலும் நீர் மாத்திரமே ஆதாரமாக இருக்கிறீர் என்பதை என் வாழ்க்கை எப்போதும் காண்பிக்கட்டும் ! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்