இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கேளுங்கள்,எங்களிடம் பதில்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருப்பதால், தொடர்ந்து உதவி கேட்க நாங்கள் பயப்படுகிறோம். தேடுங்கள்! முயற்சியும், ஆர்வமும், பொறுமையும் அவசியம்.ஆனால் இவைகள் அநேக நேரங்களில் கடினமான ஒன்றாக இருக்கும். தட்டுங்கள்! அழைப்பின் மணி ஒலியின் வாழ்கின்ற காலத்தில் நாம் இந்த செயலை மறந்துவிட்டோம். தேவன் நம்மிடம் கேளுங்கள் என்ற அடிப்படையான கொள்கையை கொண்டு நம்முடைய இருதயத்தை அவரிடம் ஊற்றவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகையினால் நாம் புறம்கூறாமல், முணுமுணுக்காமல், இருதயத்தின் வாஞ்சையையும், விருப்பங்களையும் மாத்திரம் செய்யாமல். நாம் நம்முடைய பிதாவின் சமூகத்தை நாடி அவருடைய மகிமையை தேடுவோம்.
என்னுடைய ஜெபம்
பொறுமையுள்ள பிதாவே, நீர் அநேக வேளைகளில் என்னுடைய புலம்பல்களையும், கவலைகளையும் முணுமுணுத்தல்களையும், மாத்திரமே என்னிடமிருந்து கேட்கிறீர். அதற்காக அடியேனை மன்னியும். நீர் உம்முடைய அன்பில் தயாளராக இருந்ததற்காக உமக்கு நன்றி. இன்று என் இருதயத்தில் உள்ள காரியங்களுக்கு ஊழியம் செய்யும்படி நான் உங்களிடம் கேட்கும்போது, என் இருதயத்தை உம் மீதும், உம்முடைய சித்தத்தின் மீதும் வைக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.