இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மகிமையை செலுத்துங்கள் , தேவனுக்கு கொடுக்க வேண்டிய மகிமையைக் செலுத்துவது , நம்முடைய மரண சரீரம் மற்றும் சுய-கவனம் சார்ந்த லட்சியங்களால் நமக்கு எளிதானது அல்ல. நாம் அதை ஒப்புக்கொள்வோம்: தேவனின் மகிமையான வரம்பற்ற தன்மையுடன் ஒப்பிடும்போது நாம் சுய-கவனம் மற்றும் வரையறுக்கப்பட்டவர்கள்! தேவனை ஆராதிப்பதற்க்கு மற்றவர்களை அழைக்கும் அதே வேளையில், தேவனை புகழ்வதிலும் நன்றி செலுத்துவதிலும் கவனம் செலுத்துவதை விட, நமக்குத் தேவை என்று நினைக்கும் விஷயங்களைக் தேவனிடம் கேட்பதற்கு நாம் மிகவும் பழக்கமாகிவிட்டோம். நமக்காக எதையும் கேட்காமல், தேவனுடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்த, நன்றியறிதலுடனும் ஸ்தோத்திரத்துடனும் ஜெபிக்க இந்த வாரத்தின் எஞ்சிய நேரத்தைப் பயன்படுத்துவோம். ஒன்றாக முயற்சி செய்யலாம்! இந்த வாரத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, தேவன் யார், அவர் எனக்காக என்ன செய்தார், அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளுக்காக அவரைப் புகழ்வதிலும், தொழுதுக்கொள்ளுவதிலும் , போற்றுவதிலும் , நன்றி தெரிவிப்பதிலும் ஒரு மணிநேரத்தை செலவிடலாம். இந்த நேரத்தில் தேவனிடம் எதையும் கேட்க மாட்டோம். இந்த மணிநேரம் தேவனின் மீதும் அவர் செய்தவற்றின் மீதும் கவனம் செலுத்த விரும்புகிறோம், அவருடைய பரிசுத்தத்தின் மகிமையில் அவரை வணங்கும்போது அவருக்குரிய மகிமையை அவருக்குக் கூறுவோம்!
என்னுடைய ஜெபம்
பிதாவே , நாங்கள் உம்மை முழு மனதுடனே போற்றுகிறோம். நீர் விவரிக்கவும் பாராட்டவும் என் பூமிக்குரிய வார்த்தைகளின் வல்லமைக்கு அப்பாற்பட்ட அற்புதமான மற்றும் ஆச்சரியமானவர். என் மனித வரம்புகள் இருந்தபோதிலும், நீர் அடியேன் இருக்கிற வண்ணமாகவே என்னை நேசித்தீர், மேலும் உம் குமாரனைப் போல மறுருபமாக்குகிறீர் .உம் மகிமையைக் காண எனக்கு உதவுவதற்கும் நித்திய மகிமையில் உம்மை முகமுகமாய் பார்ப்பதற்கும் இயேசுவானவரை அனுப்பியதற்காக நன்றி. உமது பரிசுத்த ஆவியின் மூலம் என்னுள் வாழ்ந்து உமது கிரியையை என்னில் செய்ததற்காக உமக்கு நன்றி. என்னையும் நான் நேசிப்பவர்களையும் உமது மாறாத கிருபையினால் தாங்கியதற்காக அடியேன் உம்மை போற்றுகிறேன். அன்புள்ள தேவனே ,இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் ஆமென் . ஆமென்.