இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இப்பொழுது வாழ்கிற காலக்கட்டத்தில் நாம் ஒருவருடைய வாழ்க்கையில் அரசியல் அல்லது சமூக ரீதியாகவும் தலையிடுவது ஒரு சரியான முயற்சியல்ல, இந்த வேத வசனம் ஒரு அமைதியான நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுப்போலிருக்கிறது. பாவம் இப்பொழுதும் இருக்கிறதாயும் எப்பொழுதும் போல மரணத்தை கொண்டுவருகிறதாயும் இருக்கிறது. ஆயினும், நியாயத்தீர்ப்பு மற்றும் சுய-நீதி என்று முத்திரை குத்தப்படுவதற்கு நாம் பயப்படுவதால், பாவத்தால் சிக்கியிருக்கும் பலரை ஆவிக்குரிய மரணத்திற்குச் செல்ல அனுமதிக்கிறோம். இந்த அழைப்பு நியாயத்தீர்ப்பு செய்யாமல் அவர்களை சந்திப்பது - நாம் நம்முடைய சுயநீதியின் மேல் இறுமாப்பல்லாதவர்களாய், பாவத்தின் தீவிரத்தையும் மற்றும் பாவத்தினால் அகப்பட்டிருக்கும் நபருடைய தேவையையும் அறிந்துக் கொள்ளவோம்." ஆனால் நான் தேவனுடைய கிருபைக்காய் செல்லுகிறேன் ".
என்னுடைய ஜெபம்
பிதாவே , எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நான் மன்னிப்பது போல் என் பாவங்களையும் நீர் மன்னியும். ஆனால், பிதாவே , என் இருதயம் பாவத்தின் தீவிரத்தால் பிடிபட்டிருக்காமல் , அது சிக்கியவர்களுக்கு உதவுவதற்கு கிரியையினால் தூண்டப்படவும் எனக்கு உதவிச்செய்யும் . என் பாவத்திலிருந்து என்னை மீட்க வந்த இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்