இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எவ்வளவு சிறப்பான சத்தியத்தின் தொகுப்பை யூதா ஆசிரியர் நமக்கு அளிக்கிறார் ! முதலாவது தேவன் நமக்காக என்ன செய்ய முடியும் என்பதை குறித்து நம் கண்கள் நோக்கி பார்க்கிறது - நாம் வீழ்வதிலிருந்து பாதுகாத்து , பரிபூரண ஆனந்தத்தோடே அவருடைய மகிமையுள்ள பிரசன்னத்தில் அவருக்கு முன் நிற்கும்படி செய்கிறார். நாம் கூர்ந்து கவனிப்போமனால் , நம்முடைய அற்புதமான தேவனைப் பற்றிய விவரிப்புக்கு நம் இருதயமும் ஈர்க்கப்படுகின்றது : எல்லவற்றையும் நடப்பிக்க வல்லவர் , அவர் ஒருவரே தேவன் , நம் இரட்சகர், மகிமையிலும், மகத்துவத்திலும், வல்லமையிலும் வாசம் செய்கிறவர் . இந்த உலகமும் அதில் உள்ள யாவும் உண்டாவதற்கு முன்பு இருந்தவரும் , இப்போது இருக்கிறவரும் , சதாகாலமும் ஜீவனோடு இருக்கிறவருமாகிய தேவன் தம் குமரனாகிய இயேசுவின் மூலமாய் நம்மோடு பேசின அதிகாரமுள்ள ஒரே மெய்யான தேவன் . தேவனின் பிள்ளைகளாகிய நமது ஆசீர்வாதங்கள் எண்ணிமுடியாதவை, ஏனென்றால் நம் தேவன் நம் நினைவின் தோற்றத்திற்கு அப்பாற்பட்டவர்; அவர் மகிமையிலே சிறந்தவர் , அற்புத கிருபையுள்ளவர் , மற்றும் விவரிக்க முடியாத பரிசுத்தத்தில் அளவிடமுடியாதவர் . நம்முடைய வார்த்தைகளினால் அவரை விவரிக்க முடியாது. நமது பிரகாசமுள்ள அறிவினால் அவருடைய மகிமையை புரிந்து கொள்ள முடியாது. அவர் மகத்துவமுள்ளவராய் இருந்தபோதிலும், குறுகிய மற்றும் குறைபாடுள்வர்களாய் இருந்த உங்களையும் என்னையும் தேவனானவர் நேசிக்கிறார்!

என்னுடைய ஜெபம்

அற்புதமும், பரிசுத்தமுமுள்ள ஆண்டவரே, உன்னதமான தேவனே , சர்வவல்லமையுள்ள தேவனாக இருந்து , மேலும் என்னை இரக்கத்துடன் நேசிப்பதற்காகவும் , இயேசுவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் உம்மை எங்களுக்கு விளங்கச் செய்ததற்காக உமக்கு நன்றி. உமது சமூகத்தில் நின்று, உம் பரிபூரணத்தை சந்தோஷமாய் அனுபவித்து, மகிமையான தூதர்களுடனே கூட சேர்ந்து உம்மை போற்றி துதிப்பதை நான் எதிர்நோக்குகிறேன். மரணம் என்னை பிரிக்கும் வரை, இன்னுமாய் என் பெலவீனங்களை விட்டு உம் மகிமையில் பிரவேசிக்கும் வரையிலும் மாம்சத்திலிருந்து அடியேன் போற்றும் என் வாயின் வார்த்தைகளினால் உண்டாகும் துதியையும் புகழ்ச்சியையும் தயவுக்கூர்ந்து ஏற்றுக்கொள்ளும் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து