இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெரும்பாலும், பாவம் மற்றும் தேவபக்தியற்ற வாழ்க்கை கவர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. இவை ஊடகங்களில் முன்னோட்டங்கள் மூலம் வியாபாரப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் வழியாக வெற்றி பெறுகின்றன. இருப்பினும், உண்மையான ஆசீர்வாதங்களுக்கான வழி தேவனுடைய வழியாகும் . அவருடைய சித்தம் நம்முடைய நன்மைக்காகவே, அவருடைய கட்டளைகள் அவருடைய இரக்கத்தினாலும் பாதுகாப்பினாலும் உண்டாயிருக்கிறது , அவருடைய வழியே மெய்யான வாழ்க்கையின் ஜீவ பாதை. நவீன கலாச்சாரத்தில் போற்றப்படும் காரியங்களை அதின் திரையை நீக்கி கீழே நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, ​​அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களின் வாழ்க்கையில் உருவாக்கிய குழப்பத்தை நாம் கவனிக்கலாம் . இருப்பினும், நாம் தேவனோடு நடக்கவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும், பரலோகத்திலுள்ள பிதாவின் வீட்டிற்குச் செல்லும்போது, ​​​​நம் ஆசீர்வாதங்களின் மீது நம் கண்களை வைத்து நடக்கும் போது நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் , அவர் நம் கிரியைகளை பார்த்து, அவருக்காக நம்முடைய இருதயத்தை ஆயத்தம் செய்திருப்பதை பார்த்து நம்மை பாராட்டுகிறார்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , உலகத்தின் பொய்களை நம்பி என்னை ஏமாற்றி, சாத்தானின் பொய்கள் மற்றும் சோதனைகளால் என்னை மயக்க முயற்சிக்களை நம்பின வேலைகளுக்காக மன்னியும் . பாவம் மனவேதனைகளையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும், இறுதியில் ஆவிக்குரிய மரணத்தையும் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன். சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது, சத்தியத்திற்காக நிற்பது, உமக்காக உண்மையாக வாழ்வது ஆகியவை பெரும்பாலும் கடினமானவை என்பதையும் நான் அறிவேன். தயவுசெய்து என் இருதயத்துடன் பேச பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துங்கள், அதனால் உம் சத்தியத்தை நான் அடையாளம் கண்டுகொள்வதோடு, உமது சித்தத்தின்படி நடப்பது எனக்கு உண்மையான வாழ்க்கையை - இப்போதும் இன்னுமாய் நித்திய வாழ்க்கை தருகிறது என்று நம்புகிறேன். இவ்வுலகின் வழிகளில் அல்ல, உமது வழியில் நடக்க கிருபை இயேசுவின் நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து