இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த நாட்களில் ஆசீர்வாதத்தின் வார்த்தைகள் எவ்வளவு குறைவாக உள்ளன என்பதை நீங்கள் கவனித்தீர்களா? உள்ளத்தின் நிறைவினால் உண்டாகும் கிறிஸ்தவ ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்வதை விட, வழுவிப்போன நிலையினால் உண்டாகும் கிண்டல் மற்றும் கேலியான வார்த்தைகளை பயன்படுத்துவது ஏதோ எளிதாக இருக்கிறது. ஆனால், தேவனின் குடும்பத்தில், வார்த்தைகள் எப்போதும் மற்றவர்களின் நன்மைக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் (எபேசியர் 4:29). பவுலானவர் பிலேமோனுக்கு அனுப்பிய இந்த வார்த்தைகளை விட, மற்றவர்களை ஆசீர்வதிக்க நாம் என்ன எளிமையான அல்லது கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும் ? இந்த வார்த்தைகளைச் சொல்ல ஒரு வழியைக் கண்டுபிடிப்போம், அவற்றை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்வோம் , பின்னர் அவற்றைப் போலவே இன்னும் அதிகமான வார்த்தைகளை பகிர்ந்துக்கொள்ள ஏதுவாகும் !
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , உம் அளவற்ற கிருபையினால் என்னை அதிகமாய் ஆசீர்வதித்துள்ளீர்கள். இன்றும் ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் யாவருக்கும் அடியேன் ஆசீர்வாதமாக இருக்கும்படி என்னைப் எடுத்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.