இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில வகையான பூமிக்குரிய மகிழ்ச்சியான காரியங்கள் நம் இருதயத்தை சிலகாலம் மகிழ்விக்கலாம் , ஆனால் கஷ்டங்கள் வரும்போது, வாழ்க்கையின் மிகவும் சவாலான காலங்களின் வறட்சியினால் நம் இருதயம் சோர்ந்து போய்விடும் . இருப்பினும், கர்த்தரிலும், நமக்கான அவருடைய சித்தத்திலும் மகிழ்ச்சியடைவது, நமக்குள் தொடர்ந்து மற்றும் எப்போதும் புத்தம்புதிய மகிழ்ச்சியை அளிக்கிறது மற்றும் பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு ஜீவனை அளிக்கிறது (யோவான் 7:37-39). இந்த வாழ்க்கை முறை மற்றும் தேவனின் பரிசுத்த ஆவியின் கிருபையால் - தேவன் மற்றும் அவரது வார்த்தையை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை, அவருடைய சத்தியத்தை நம் இருதயங்களில் நிரப்ப அவரது பரிசுத்த ஆவியின் மேல் நசம்பிக்கையாய் இருக்கிறது - நாம் குறுகிய காலத்தில் செழித்து, புத்துணர்ச்சி, புதுபெலன் மற்றும் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் இருப்பதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கண்டறிவதினால் வறட்சியான கலங்கிகளில் நிலைத்து நிற்க உதவி செய்கிறது.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , பரலோகத்தின் பரிசுத்தரே, நான் உம்மிலும் உமது சாத்தியத்திலும் மகிழ்ச்சியடைகிறேன். உம் நிலைத்திருக்கும் ஆவியில் நான் புத்துணர்ச்சியைக் காண்கிறேன். வாழ்க்கையின் சவாலான பாதைகளுக்கு புத்துணர்ச்சி மற்றும் பெலன் மற்றும் நீர் என்னிடமிருந்து அதைத் தேடும் பருவங்களில் பலனைத் தருவதற்கு உம்முடைய வாக்குறுதியின் உண்மையை நான் தேர்வு செய்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே , நான் நம்புகிறேன், நான் விசுவாசத்துடன் இதை ஜெபிக்கிறேன். ஆமென்.