இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டோம் . மனுஷனை மாத்திரமல்ல , ஆணாகவும் . மனுஷி மாத்திரமல்ல , பெண்னாகவும் சிருஷ்டித்தார் . ஆணும்,பெண்ணுமாகிய இருபாலரும் தேவனின் சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் ! அவை ஒவ்வொருவரும் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள் . நம்பமுடியாதபடி, பாவம் இவ்வுலகிற்குள் பிரவேசித்து எல்லாவற்றையும் குழப்பி, வீழ்வதற்கு முன்பு இது மெய்யல்ல . தேவன் நம்மை உண்டாக்கி, நம்மைப் பெற்ற தாயின் வயிற்றில் உண்டாவதற்கு முன்பு நம்மை அறிந்திருக்கிறார் (சங்கீதம் 139:13-16), அவர் நம்மைத் தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 9:6). ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிருஷ்டிகரின் குணாதிசயத்தை பிரதிபலிப்பதால், எல்லா ஜனங்களும் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள் ,ஆகையால் ஒவ்வொரு நபரும் மதிக்கப்பட வேண்டும். யாரையும் இழிவுபடுத்தவோ, குறைவாக எண்ணவோ அல்லது சபிக்கவோ கூடாது (யாக்கோபு 3:9-12). மனிதர்கள் தேவனுக்கு மாத்திரமல்ல , நமக்கும் விலையேறப்பெற்றவர்கள், ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் தேவனின் குணாதிசயத்தையும் சாயலையும் பிரதிபலிக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரே, இன்றும் இன்னுமாய் இனி வரும் ஒவ்வொரு புதிய நாளிலும் அடியேன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் மதிக்க எனக்கு உதவிச்செய்யும். உம் குணத்தையும் இயல்பையும் பிரதிபலிக்கும் வகையில் அவை ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் பேர்பேராகவும் நீர் உருவாக்கியுள்ளீர்கள் என்பதை நான் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அறிந்திருப்பதால் நான் அவர்களை மதிக்க விரும்புகிறேன். அதே சமயம், ஒவ்வொரு நாளும் உம்மைப் போலவே என்னை மாற்றும் போது, ​​நான் உணர்வுபூர்வமாக உம் பரிசுத்த ஆவிக்கு என்னை ஒப்புக்கொடுக்கும்போது, ​​ஆவிக்குரிய வளர்ச்சியுடன் அடியேனை ஆசீர்வதித்தருளும் (2 கொரிந்தியர் 3:18). இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து