இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கடந்த சில நாட்களாக 1ஆம் சங்கீததில் உள்ள வசனத்திலிருந்து நம் நேரத்தை செலவிட்டோம். கர்த்தருக்குள் பிரியமாயிருக்கிறவர்களை குறித்து பார்த்தோம். இன்று, தேவனின் விருப்பத்தையும் வழியையும் எதிர்த்து, தீய வழியைத் தேர்ந்தெடுப்பவர்களின் முடிவை குறித்து நம் கவனத்தை செலுத்துகிறோம். தீய திட்டங்களின் தற்காலிக வெளிப்படையான பலன்கள் மற்றும் தீய சக்திகள் எதுவாக இருந்தாலும், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் நரகத்தின் அதிபதியின் செல்வாக்கால் சிதைக்கப்பட்டு கல்லறையில் முடிவடையும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு, ஒவ்வொரு துன்மார்க்கரும் தேவனின் நீதிக்கும், அவருடைய நியாயதீர்ப்புக்கு முன் நிற்கும்போது பூமியிலே வீணாக செலவிட்ட நேரத்தைத் தவிர வேறு எதையும் அவர்களுடைய வாழ்க்கைக்காகக் காட்டவில்லை. தேவனின் வழி, சித்தம் மற்றும் வார்த்தைகளில் நம் மகிழ்ச்சியைக் கண்டறிவது மாத்திரமே நம்மை நித்திய மற்றும் முடிவில்லா மகிழ்ச்சிக்கு வழிநடத்தும்!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , தீய வழிகள் , திட்டங்கள், முறைகள் மற்றும் திட்டங்களின் மூலம் வெற்றி பெறுபவர்களை மாதிரியாக வைத்து அவர்களை உயர்த்துவதற்கான சோதனையைத் தடுக்க எனக்கு உதவுங்கள். நான் உமது ராஜ்ஜியத்தையும் மற்ற எல்லாவற்றிலும் நீதியையும் தேடும்போது என் இருதயத்தை வழிநடத்தும்படி பரிசுத்த ஆவியானவரைக் கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து