இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் வாழ்க்கை, இயேசுவின் உயிர்த்தெழுதல், இயேசுவின் சுவிசேஷம் இயேசுவின் ஈவாகிய பரிசுத்த ஆவியானவர் , இயேசுவை குறித்த பிரகடனம் மற்றும் இயேசுவின் கிரியை மறுரூபமாக்கக்கூடியது. உங்களுக்கு என்னுடைய யோசனை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதற்கான திறவுகோல், மையம், அச்சாணி மற்றும் இருதயம் இயேசுவானவர் மாத்திரமே . இயேசு கிறிஸ்து நம் இலக்கு - நாம் தேடும் பரிபூரணம் அவர்தான் என்பதையும் பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். இயேசுவின் சீஷர்களாகிய நாம் அவரைப் போல் ஆக விரும்புகிறோம் (லூக்கா 6:40). பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்து செயல்படுகிறார், ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் அவருடைய குணத்தை வெளிப்படுத்த உதவி செய்கிறார் (கலாத்தியர் 5:22-25, 4:19) நாம் இயேசுவைப் போல முழுமையாக மறுரூபம் ஆகும் வரை (2 கொரிந்தியர் 3:18). அவரை தேடுவோம், அறிவிப்போம், இயேசுவைப் போல் ஆகுவோம்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , தயவுசெய்து என்னை மன்னியுங்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில், சில சமயங்களில் இயேசுவின் வாழ்க்கை அவர்களை மாற்றும் ஆற்றலை நான் இழந்துவிட்டேன், மேலும் என்னுடைய அற்ப வளங்கள், புரிதல் மற்றும் செல்வாக்கை நம்பி செயல்படுகிறேன் . நான் கிறிஸ்துவை இன்னும் பரிபூரணமாக அறிந்துகொள்ளவும், கிறிஸ்துவைப் போல முழுமையாக இருக்கவும் முற்படுகையில், மற்றவர்களை அவரிடம் வழிநடத்த என்னைப் பயன்படுத்துங்கள், அதனால் அவர்களும் அவரைப் போல் ஆகலாம். எல்லா நாமங்களுக்கு மேலான நாமமும், என் வாழ்க்கையின் லட்சியமுமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து