இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய வேண்டும் என்ற தேவனின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய மறுத்ததை நினைப்பூட்டி, மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு தனது பிரியாவிடை செய்தியைத் தொடங்கினார். ஒரு புதிய தலைவரைப் பின்தொடர வேண்டிய புதிய தலைமுறையினரை மோசேவானவர் தன் மரணத்திற்கு முன்பாக தயார்படுத்துகிறார். அவர்களுடைய பெற்றோர்களால் செய்ய முடியாத வல்லமையுள்ள காரியங்களை யோசுவாவின் தலைமையில் வரும் நாட்களில் அவர்கள் செய்யும்படி தேவனும் மோசேயும் அவர்களைத் தயார்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் தள்ளின அதே கட்டளைக்குக் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும்: பெலமாகவும் தைரியமாகவும் இருங்கள், கலங்கவோ பயப்படவோ வேண்டாம் (யோசுவா 1:1-18). இந்தப் பெற்றோர் தேவனைப் புறக்கணித்தனர். பிதாக்களுக்கு இல்லாத விசுவாசம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இருக்குமா? இந்த அடுத்த சந்ததியாரும் கலகம் செய்வார்களோ ? அவர்களுடைய பெற்றோர்கள் மோசேக்கு எதிர்த்து இருந்தது போல அவர்களும் யோசுவாவுக்கும் செய்வார்களோ ? இருப்பினும், உங்களுக்கும் எனக்கும் மிகவும் ஆழமான கேள்வி இதுதான்: நாம் கலங்கி பயந்து இன்று நம் கிறிஸ்துவுக்குள்ளான சபை தலைவர்களை குறைத்து விடுவோமா அல்லது தேவனை விசுவாசித்து உண்மையாக முன்னேறுவோமா?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே, எல்லா காலங்களிலும் உம் மக்களை மீட்பதற்கும், காப்பாற்றுவதற்கும், வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் உம் வல்லமையுள்ள கிரியைகளினால் நீர் நடப்பித்ததினால் எல்லா கனமும் , மகிமையும் உமக்கே உரியதாகட்டும். அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வல்லமையில் விசுவாசம் வைக்க பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு உதவவும் ,அதினால் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், வாஞ்சையுள்ள இருதயத்தையும், இன்னும் நிறைவேறாத உம் மகத்தான கிரியைகளையும் காணும்படி எனக்கு கண்களை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.