இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கடையானவன் ? யாரும் கடைசியாக இருக்க விரும்புவதில்லை. கடைசி இடத்தை விட இரண்டாவது இடத்தைப் பிடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இயேசு தரவரிசையை மாற்றுகிறார். அவருக்கு மிக முக்கியமான நபர் என்பவர் அந்தஸ்து மற்றும் புகழ் தேடுபவர் அல்ல. மிக முக்கியமான நபர் என்பவர் இயேசுவைப் போல இருப்பவர் : உயர்ந்த இடம் மற்றும் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பவர். ஊழியம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இயேசுவைப் பொறுத்தவரை, கடைசி என்பது ஊழியத்தில் முதலாவதும், தேவனுடைய பார்வையில் முதன்மையாய் இருப்பதுமே.
என்னுடைய ஜெபம்
மகத்துவமுள்ள தேவனே , என் இரட்சகரே, நீர் இந்த உலகத்தை எனக்காக அற்புதமாக்கி அடியேனை மீட்க உமது குமாரனைக் கொடுத்தீர். உமது கிருபைக்கும் தயவுக்கும் நான் எப்படி நன்றி செலுத்துவேன் அல்லது என்னத்தை திருப்பிச் செலுத்துவேன் ? கிருபையுடனும், தயவுடனும் மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்ய எனக்கு உதவுங்கள். உம்மைப் போலவே நானும் மற்றவர்களைப் பார்க்க என் மனக்கண்களைத் திறந்தருளும்; வெறும் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல், இயேசுவைப் போலவே மற்றவர்களை மதிக்கவும் , நடத்தவும் உதவிச் செய்யும் . தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.