இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துயரத்தோடே தொடங்கும் இந்த சங்கீதப் பகுதி சிலுவையில் இருந்து இயேசு கிறிஸ்துவினால் குறிப்பிடப்பட்டது, இது நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் சங்கீதமாகும். தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுடன் சத்தியபரராய் இருந்ததின் வரலாறு, மிக மோசமான சூழ்நிலையிலும் நம்மை விடுவிப்பார் என்று நாம் நம்பலாம் என்பதை தொடர்ந்து நினைப்பூட்டுகிறது. காலத்தைப் பற்றிய நமது மனிதக் கணக்கீட்டில், தேவனின் பதில் வருவதில் தாமதமாகத் தோன்றலாம், ஆனால் வரலாற்றின் மூலம் தேவனின் வழிநடத்துதலின் பதிவாகும் , பரலோகத்தில் தேவனாவர் பதிலளிப்பார், விடுவிப்பார், ஆசீர்வதிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயினும்கூட, நமது மோசமான கனவுகளில், விரக்தி, புலம்பல், துக்கம், வேதனை மற்றும் பயம் ஆகியவற்றின் அழுகைகளுக்கு தேவன் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவும் கவனமாகவும் இருக்கிறார் என்பதை நினைவூட்டலாம். சிலுவையில் இயேசுவுக்கு என்ன நடந்தது என்பது சங்கீதம் 22:1 இன் துயரம் மற்றும் கைவிடப்பட்ட உணர்வுகளுடன் முடிவடையவில்லை, ஆனால் சங்கீதம் 22:23-24 ஆம் வாக்கியத்தில் வெற்றியுடன் முடிகிறது : கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள், உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே, துன்புறுத்தல், அடக்குமுறை, வன்முறை அல்லது தியாகம் போன்ற கடினமான சூழ்நிலைகளில் தங்களைக் கண்டுபிடிக்கும் உம் மக்களை எல்லா இடங்களிலும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து உம் பரிசுத்த ஆவியால் அவர்களுக்கு அதிகாரம் கொடுங்கள் மற்றும் அவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளில் சிறந்த மாற்றத்தை தந்து அவர்களை ஆசீர்வதித்தருளும் . தயவு செய்து உம் மக்களின் அழுகையைக் கேட்டு, அவர்களின் பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் நியாயப்படுத்துதலுக்காக விரைந்து செயல்படுங்கள். நம்முடைய ஜெயங்கொடுக்கும் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து