இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த நாளுக்கான உங்களுடைய திட்டங்கள் என்ன? நீங்கள் என்னைப் போல் இருந்தால், உங்கள் நாளை ஜெபத்தோடே கூட திட்டமிடுங்கள். அப்படி எதிர்காலத்திற்கான காரியங்களுக்காக மற்ற நபர்களுடன் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும் , அவர்களின் கவலைகளைக் கேட்கவும் அல்லது நீங்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி விவாதிக்க நீங்கள் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக ஜெபியுங்கள் . ஆனால் நாம் எப்போதும் பணிவுடன் வாழ வேண்டும், நம் திட்டங்கள் எதுவும் பிதாவிடமிருந்து வராத வரை அது ஒருபோதும் மேன்மையானதாக இருக்காது!
என்னுடைய ஜெபம்
பரிசுத்த தேவனே, நீதியுள்ள பிதாவே, என்னுடைய திட்டங்கள் மற்றும் முடிவுகளுக்கான உமது சித்தத்தை நான் அறிய முற்படுகையில், தயவுசெய்து என்னை ஆசீர்வதித்தருளும் . நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் ஒரு நலமான ஈவு என்பதையும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வெற்றியும் உம் கிருபையினால் மாத்திரமே தான் என்பதையும் நான் முழுமனதோடே ஒப்புக்கொள்ளுகிறேன் . உமக்கு மகிமையைக் கொண்டுவர என்னை எடுத்து பயன்படுத்தும் , என் வாழ்க்கைக்கான உம் பாதையைக் கண்டறிய எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.