இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில், சுபாவமாகவே எதிர்த்து நிற்பதின் விளைவு அதன் சுய நீதியாகும். நாம் விரும்புவதையும் அதை பின்தொடர்வதையும் தேவன் நமக்கு விட்டுக்கொடுக்கிறார், அதன் பலனை அறுவடை செய்ய அனுமதிக்கிறார் (ரோமர் 1:24). தேவனுக்கு எதிராக மனுஷன் செய்யும் கலகம் இறுதியில் தீய பலனை உண்டாக்குகிறது . துன்மார்க்கம் பெரும்பாலும் நாமே நமக்கு கொடுக்கும் மோசமான தண்டனையாகும். கடந்த நாட்களில் உதாரத்துவமுள்ள தேவனுடைய முகத்தை நாடினோம் , இப்பொழுதும் அவருடைய வழியைத் தவிர வேறு எந்த வழியையும் எவ்வாறு நாம் பின்பற்றலாம் ? குறுகிய காலத்தில் தேவனையும் அவருடைய ஞானத்தையும் உண்மையாகப் பின்பற்றுவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு தேவனுக்கு கனத்தை கொடுப்பதை ஒப்பிடுவதற்கு எந்த காரியமும் இல்லை!

என்னுடைய ஜெபம்

நீதியும்,இரக்கமுள்ள பிதாவே , உமது கிருபையினால் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி. கிருபை , இரக்கம் மற்றும் நீதியுடன் உலகத்தை நியாயந்தீர்ப்பதாக வாக்களித்ததற்காக நன்றி. உம்மிடமும் , உம் வார்த்தையினால் மாத்திரமே எது சரி, நியாயமானது என்ற உணர்வை நான் காண்கிறேனா? ஒடுக்கப்பட்ட, ஏளனப்படுத்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் தேவனே , உம்மிடம் மன்றாடுகிறேன். இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் இன்னும் அறியாதவர்கள் மனந்திரும்பவும், அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றவும் நான் மன்றாடுகிறேன். அவருடைய வல்ல நாமத்தின் மூலமாய் , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து