இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நடக்க வேண்டிய வழியையும், இன்னுமாய் அவருடைய உதவியையும் நாடி ஜெபிக்கும்போது தேவன் அவற்றில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்! அவருடைய ராஜ்யத்தையும், ஜனங்களையும் கட்டியெழுப்ப நாம் முயற்சித்து அதில் அதிக கவனம் செலுத்தும் பொழுது இந்த வாக்கியம் மெய்யென்று விளங்குகின்றது. நெகேமியா தேவனுடைய ஒரு ஊழியக்காரனாய் இருக்கிறார். தேவனிடம் இந்த காரியங்களை செய்யுங்கள் என்று ஒரு வேலைகாரனுக்கு கட்டளையிடுவது போல தேவனிடம் சொல்லாமல் . மாறாக, நெகேமியாவின் இருதயம் தேவனுடைய மக்களின் தேவைகளினால் பற்றி எரிகிறது. அவருடைய பிள்ளைகளின் இருதயத்தின் வாஞ்சை அவருடைய ஜனத்தின் மீதும், அவருடைய சித்தத்தின் மீதும் இருந்து ஜெபிக்கும்போது தேவன் அவர்களை நேசிக்கிறார் என்பதை நெகேமியாவின் புத்தகத்தின் பிற்பகுதிகளில் நாம் பார்க்கலாம்.

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் நீதியுள்ள பிதாவே , தயவுசெய்து என்னை இன்று உமது ஊழியக்காரராக பயன்படுத்துங்கள். என் வார்த்தைகளை எடுத்து ஆசீர்வதிக்கவும், ஊக்கப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும் பயன்படுத்தவும். எனது மாதிரியை எடுத்து அதை சரிசெய்யவும் ஊக்கப்படுத்தவும் பயன்படுத்தும். எனது நேரத்தை எடுத்து உமக்குரிய காரியங்களினால் நிரப்பியருளும் நான் கையிட்டு செய்யும் எல்லாவற்றின் மூலமாக மகிமையும் மரியாதையும் இறுதியில் உமக்கு கனத்தையும் கொண்டுவரட்டும். உமது கிருபை என்னைக் மீட்டது , தயவுக்கூர்ந்து அந்த கிருபையை பிறருடன் பகிர்ந்து கொள்ள இப்போது என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து