இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
யோவான்ஆசிரியர் தான் நேசிப்பவர்கள் மற்றும் இயேசுவைக் கனப்படுத்த விரும்புபவர்களின் வாழ்க்கையில் ஒரே ஒரு பாவ காரியம் கூட நிகழாமல் தடுக்க விரும்புகிறார். அவர்கள் மீது அதிக அக்கறை காண்பிக்கிறார் , ஏனென்றால் ஒரே ஒரு பாவமான காரியத்தின் மூலமாய் கூட சாத்தானால் நம்மை தொய்ந்து போகும்படி செய்யவும் இன்னுமாய் , நாம் உற்சாகப்படுத்த நினைப்பவர்களை காயப்படுத்த அவைகளை பயன்படுத்தக்கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நம்மிடம் ஒரு இரட்சகரும், பாதுகாவலரும் இருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த இரட்சகர், இந்த பாதுகாவலர், நம்மை மீட்க மாபெரும்விலையை கொடுத்திருக்கிறார் . பாவத்தின் வல்லமையைக் மேற்கொள்ளும்படி நமக்கு உதவ அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். அவர் நமக்காக இடைப்பட்டு பிதாவிடம் பரிந்து பேசி, நம்மை மன்னித்து, நம்மைப் பரிசுத்தமாக்கி, நம்மைத் தம்முடையவர்களாக ஆக்கிக்கொள்ளும் சிலாக்கியத்தை கொடுப்பார் !
என்னுடைய ஜெபம்
பிதாவே , என்னுடைய பலவீனம் மற்றும் பாவம் செய்யக்கூடிய பாதிப்பு ஆகியவற்றால் நான் வெட்கப்படுகிறேன். அந்த வெட்கத்தின் தருணங்களில் கூட, உம் பரிசுத்த பிரசன்னத்திலே மறுபடியுமாய் வந்து நிற்பதற்கு இயேசுவானவர் எனக்கு வழியை அளித்ததற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்க விரும்புகிறேன் . இயேசுவே, என்னைக் காப்பாற்றுவதற்கும் என்னை பாதுகாப்பதற்கும் வந்ததற்காக உமக்கு நன்றி. நான் தடுமாறும் போதும், தடுமாறி விழும் போதும், சாத்தான் என்னை ஏளனம் செய்ய விடமாட்டேன். மாறாக, உம் குணாதிசயத்துடனும், உம் மேன்மைக்காகவும் வாழ நான் என்னை மீண்டும் ஒப்புக்கொடுப்பேன். கர்த்தராகிய இயேசுவே, என் நீதியுள்ள பாதுகாவலரே, உம்முடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.