இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அநேக சமயங்களில் சாத்தான் ஒரு தவறான வழியில் நம்மை அழைத்து செல்கிறான், அதாவது இரு பரிமாண கிறிஸ்தவத்திற்கு மயக்குகிறான் - சபைக்கு தவறாமல் செல்வது, நற்கிரியைகளை மாத்திரம் செய்வது . ஆனால் தேவனோ நம்மை முப்பரிமாண விசுவாசத்திற்கு அழைக்கிறார். எதற்காக என்றால் நாம் நம் முழு இருதயத்தோடும், நம் முழு ஆத்துமாவோடும் , நம் முழு பலத்தோடும் அவரை அன்புக்கூர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன் . உம்முடைய அனைத்து அன்பிற்காகவும்,ஆசீர்வாதங்களுக்காகவும் நான் உம்மை போற்றுகிறேன். நீர் முன்னே இயேசுவின் மூலமாய் என்னில் அன்புக்கூர்ந்ததினால் அடியேனும் உம்மை நேசிக்கிறேன். இன்று என் இருதயத்தின் விருப்பம் என்னவென்றால் அடியேன் கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும், உம்மை அன்புகூறுவதிலும் , வாயின் வார்த்தைகளினாலும் என்னுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இயேசுவின் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.