இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இது ஒரு சிறந்த கேள்வியாகும் ! அன்பு எங்கிருந்து வருகிறது? அன்பு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது மற்றும் உண்மையாக அறியப்படுகிறது? அன்பு தேவனிடத்தில் இருக்கிறது . அன்பு தேவனிடமிருந்து வருகிறது. அன்பு என்பது தேவனின் முக்கியமான குணாதிசயமாகும் . அன்பு தேவனிடமிருந்து வந்தது. அன்பு தேவனால் உண்டாயிறுக்கிறது . நீங்கள் இன்னும் அன்பாக இருக்க விரும்புகிறீர்களா? உங்கள் அன்பில் அதிக தீவிரம் காட்ட விரும்புகிறீர்களா? நேசிக்க கடினமாக இருக்கும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்பதை அறிய விரும்புகிறீர்களா? தேவனை நோக்கிப் பாருங்கள். மேலும் தேவனின் அன்பை நாம் எங்கு மிகத் தெளிவாகக் காண்கிறோம்? இயேசுவினிடத்தில் ! இயேசுவின் மூலம் தேவன் எப்படி நம்மீது அன்பு காண்பிக்கிறார் என்பதைப் பாருங்கள். கடந்த காலங்களில் மற்றும் இப்போது நம் வாழ்வில் இன்றும் கூட. தேவன் எப்படி நேசிக்கிறார் என்பதை நாம் கவனித்தவுடன், தேவன் நம்மை நேசித்ததைப் போல மற்றவர்களை நேசிப்போம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , மற்றவர்களை இன்னும் பரிபூரணமாக நேசிப்பதன் மூலம் நீர் என் பிதா என்பதை நான் இவ்வுலகிற்கு காண்பிக்க விரும்புகிறேன். மற்றவர்களை அன்புடன் நடத்துவதில் இயேசுவின் மாதிரியை நான் பின்பற்ற விரும்பும் என்னை ஆசீர்வதித்தருளும் . என் பிதாவே, அடியேன் உம்மைப்போல அன்பாக இருக்க உமது கிருபையை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்.