இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பில்லாதவன் தேவனை அறியான். இது மிகவும் எளிமையானது அல்லவா . சொன்னது போதும். வெறும் வார்த்தைகள் மாத்திரம் தேவையில்லை. எனவே, தேவனின் கிருபையினால் நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியின் வல்லமையை நாடுவோம், எனவே தேவன் நம்மை நேசித்ததைப் போல நாமும் நேசிக்க முடியும் (ரோமர் 5:5).

என்னுடைய ஜெபம்

பிதாவே , அன்பான இருதயம் மற்றும் உம் அன்பை மற்றவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறையை கொடுத்து என்னை ஆசீர்வதியுங்கள். நான் இதை செய்ய எனக்கு உதவியருளும் , நீர் விரும்புவதைப் போல, உம் அன்பை பரிசுத்த ஆவியின் மூலமாய் என் இருதயத்திலே பொழிந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து